fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

கொரோனா பரவல் எதிரொலி…! நாடு முழுவதும் நீட் தேர்வு தள்ளி வைப்பு….!

NEET Exam postponed to august

டெல்லி:

நீட் தேர்வு  தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலையில் நடைபெற திட்டமிட்டிருந்த நீட் மற்றும் JEE மெயின் பெயர்களை ஒத்தி வைக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.

இந்த தேர்வுகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந் நிலையில் இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது.

ஏற்கனவே பல தேர்வுகள் இந்தியா முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே நீட் தேர்வையும் ரத்து செய்து 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

அதேநேரத்தில் நீட் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில் 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close