fbpx
Others

தமிழக அரசின் கவனத்துக்கு…..?

காவலர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் காவல் உயர் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா???

 

காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரை வாரத்தில் ஒரு நாள் விடுப்பு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.24 மணி நேரமும் பணி செய்து வரும் காவலர்களுக்கு தொடர் பணியால் காவல் துறையினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுவது, உடல் நிலை பாதித்து இறப்பு, தற்கொலை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. பல தரப்பிலும் விடுப்பு அளிக்கும்படி கோரிக்கை தொடர்ந்தது.
இந்நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சட்டசபையில் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி உட்கோட்டம் முன்னீர் பள்ளம் காவல் நிலையத்தில் அரசு ஆணைப் பிறப்பித்தும் இந்த நடைமுறையை அமல்படுத்துவதில்லை. அதனால்காவலர்கள் அனைவரும் மிகவும் மன உளைச்சலில் வெளியில் சொல்லமுடியாமலும், மேலதிகாரியிடம் கேள்வி கேட்க முடியாமலும், தயங்கியபடி வருத்தத்துடன் காணப்படுகின்றனர். இதை அரசு கவனத்தில் கொண்டு மேற்படி காவல் நிலைய காவலர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கு விடுப்பு அளிக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறாரகள்.மேலும் இந்த காவல் நிலையத்தில்தான் சமுக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களோடு கை கோர்த்துக் கொண்டு உயர் அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்று அங்குள்ள கிராமவாசிகள் கூறுகின்றனர்.அரசு நடவடிக்கை எடுக்குமா??? பொறுத்திருந்து பார்ப்போம்…

Related Articles

Back to top button
Close
Close