fbpx
Others

தமிழக அரசின் கவனத்திற்கு…..!

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட வடகரை சிக்னல் முதல் கிராண்ட் லயன், வடபெரும்பாக்கம் வரை அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனை போக்க நான்குவழிசாலை அமைக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த சாலைவழியாக சென்னை துறைமுகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான கண்டெய்னர், கனரகவாகனங்கள் செல்கிறது.இதனால்மிகவும்நெரிசல்ஏற்பட்டுவாகனஓட்டிகள்சிரமப்பட்டுவருகின்றனர்.மீஞ்சூர், வண்டலூர் புறவழிசாலை வழியாக வடமாநிலம்செல்ல வேண்டிய அனைத்து கனரக வாகனங்களும் மாதவரம் நெடுஞ்சாலை வழியாக சென்று போக்கு வரத்து நெரிசலை உண்டாக்கி வருகிறது.இந்த பகுதியில் அரசுமூலம் செயல்படும்ஐ.டிஐ,மற்றும்அரசு,பள்ளி,தனியார்பள்ளிகளில் சுமார்ஐயாயிரம்மாணவ,மாணவிகள்படிக்கின்றனர்.தினமும்காலை, மாலை வேளையில் இதே சாலையில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுவருகிறது.எனவேபோக்குவரத்து துறை மூலம் கனரக வாகனங்கள் செல்வதற்கு காலை மற்றும் மாலையில் நேரக்கட்டுப்பாடு அறிவிப்பதுடன், இந்த சாலையை 4 வழி சாலை ஆக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close