fbpx
RETamil Newsஉலகம்

ரஷ்யாவில் கட்டிட விபத்து – 35 மணிநேர போராட்டத்திற்கு பிறகு 1 குழந்தை உயிருடன் மீட்பு , 37 பேர் பலி

ரஷ்யாவில் ஏற்பட்ட ஒரு கட்டிட விபத்தில் சிக்கிய குழந்தையை மீட்பு குழுவினர் 35 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர். மேலும் இந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ரஷியா அவசர சிகிச்சை பிரிவு அதிகாரி கூறியதாவது; ரஷ்யாவில் உள்ள மங்னிட்டோகோர்ஸ் என்ற நகரில் உள்ள 48 தளங்களை கொண்ட அடுக்கு மாடிகட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தால் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அதில் இருந்த ஆண் குழந்தை ஒன்று சிக்கிக்கொண்டது. அதனால் அந்த குழந்தையை மீட்கும் பணியில் மீட்பு பணி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில் அந்த குழந்தை 35 மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டது.

இது ஒரு அதிர்ஷ்டவசமாக நிகழ்வு ஆகும்.மீட்கப்பட்ட குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அக்குழந்தையின் தாயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கட்டிட விபத்தில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 22 பேர் உடல் கிடைத்துள்ளதாகவும் ‘ கூறினார்.

மீட்கப்பட்ட குழந்தை பிங்க் நிற சாக்ஸ் அணிந்திருந்ததாகவும், பயப்படும் வகையில் எந்த காயமும் அந்த குழந்தைக்கு ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

அக்குழந்தையை மீட்ட அந்த மீட்பு பணி வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close