fbpx
Others

தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில்பனை விதைகளைநட்ட கல்லூரி மாணவர்கள்..

தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பனை விதைகளை நட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள்பொதுமக்கள் பாராட்டு   நீடாமங்கலம், அக்.14
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தலின்படி மாநில நாட்டுநலப்பணித்திட்டக்குழுமம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டக்குழுமம், திருவாரூர் மாவட்ட வனத்துறை இணைந்து ஒருங்கிணைக்கும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியில் நேற்று தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்வெண்ணி முதல் நீடாமங்கலம் வரை சுற்றுச்சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு கோவில்வெண்ணி அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பனை விதைகளை விதைத்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கண்ணன், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கிரீன் நீடா மு.ராஜவேலு உட்பட 60 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். பனை விதைகளை விதைத்து மண்ணரிப்பை தடுப்போம், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close