fbpx
Others

டெல்லி நீதிமன்ற தீர்ப்பு—கேஜ்ரிவால் உள்பட 23பேரையும்வழக்கில்இருந்துவிடுதலை….

Phansi Ghar authenticity probe: Kejriwal and Sisodia skip Privileges Committee sittingகடந்த 2015 பிப்ரவரி முதல் 2024 செப்டம்பர் வரை டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தியது. அப்போது 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை ஆம்ஆத்மிஅரசுஅமல்படுத்தியது.இதன்படி849தனியார்நிறுவனங்களுக்குமதுக்கடைஉரிமங்கள்வழங்கப்பட்டன. இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தின. சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் எம்.பி. கவிதா உள்ளிட்ட 23 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தனியாருக்கு மதுபானக் கடை உரிமங்கள் வழங்கியதில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டிருப்பதாக சிபிஐ அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.இந்த வழக்கில் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்தனர்.சிபிஐ பதிவு செய்த வழக்கின் விசாரணை, டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முடிவடைந்தது.சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: மதுபானக் கொள்கை வழக்கின் முதல் எதிரியாக டெல்லி கலால் துறையின் அப்போதைய துணை ஆணையர் குல்தீப் சிங் சேர்க்கப்பட்டு உள்ளார்.அவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, வழக்கில் சிக்க வைக்கப்பட்டு உள்ளார். அவரை விசாரித்த சிபிஐ அதிகாரி மீது துறைரீதியாக விசாரணை நடத்தஉத்தரவிடுகிறேன்.மதுபானக் கொள்கையில் சதியோ,5 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்.. இன்று சிறையிலிருந்து வெளியே வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. டெல்லி அரசியலில் திடீர் திருப்பம் கிரிமினல்குற்றமோகண்டறியப்படவில்லை.சிபிஐஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தும்போதுமானஆதாரங்கள்தாக்கல்செய்யப்படவில்லை.எனவேகுற்றம்சாட்டப்பட்டுள்ள23பேரையும்வழக்கில்  இருந்துவிடுதலை செய்கிறேன். இவ்வாறு நீதிபதி ஜிதேந்திர சிங் தீர்ப்பளித்தார்.டெல்லி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுஉள்ளது.டெல்லிசிறப்புநீதிமன்றதீர்ப்புகுறித்துஆம்ஆத்மிஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் கூறும் போது, “எனது வாழ்க்கையில் நேர்மையை மட்டுமே சம்பாதித்து வைத்திருந்தேன். ஆனால், என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது டெல்லி நீதிமன்றம் என்னையும் ஆம் ஆத்மி தலைவர்களையும்நிரபராதிகள்என்றுகூறிவிடுதலைசெய்திருக்கிறது” என்று தெரிவித்தார். அவர் பேட்டியளித்து கொண்டிருந்த போது உணர்ச்சிப் பெருக்கில் திடீரென கண்ணீர்விட்டு கதறி அழுதார். அவரை, மணீஷ் சிசோடியா அரவணைத்து தேற்றினார்.

Related Articles

Back to top button
Close
Close