fbpx
Others

டி.என்.பாளையம்,மது விற்ற முதியவர் உள்பட 2 பேர் கைது..

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வாணிப்புத்தூர் சுடுகாடு அருகே பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மது விற்று கொண்டிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வாணிப்புத்தூர் ஜே.ஜே.நகரை சேர்ந்த துரைசாமி (வயது 75) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் திங்களூர் அருகே உள்ள காசுக்காரன்பாளைம் பகுதியில் மது விற்றதாக திங்களூர் அண்ணாநகரை சேர்த்த பழனிச்சாமி (49) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 மது பாட் டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட நிருபர் SKTசுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close