டிரம் சொன்னது போல இன்று ஈரான் மீது தாக்கப்படலாம்…..
ட்ரூத் சோஷியல் மீடியாவில் டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், மத்திய கிழக்கை ஆள முற்பட்ட ஈரான், அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களைத் தாக்காமல் சரணடைந்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், ஈரான் அதன் அண்டை நாடுகளிடம் தோல்வி கண்டது இதுவே முதல் முறை.ஈரான்தலைவர்கள்எனக்குநன்றிசொன்னார்கள். நான் அதை வரவேற்றேன். ஈரான் இனி மத்திய கிழக்கின் ரவுடி கிடையாது. அது தோல்வியடைந்த நாடு. அது முழுமையாக சரிந்து விழும் வரைபல ஆண்டுகளுக்கு அப்படித்தான் இருக்கும். இன்று ஈரான் மிகக் கடுமையாகத் தாக்கப்படும். ஈரானின் மோசமான நடத்தை காரணமாக, இதுவரை குறி வைக்கப்படாத பல பகுதிகள் மற்றும் குழுக்கள், முழுமையான அழிவு மற்றும் மரணத்தை எதிர்கொள்ளும். இதற்கான திட்டம் தீவிரமாகப் பரிசீலனையில் உள்ளது”என்று கூறியிருக்கிறார்.டிரம் சொன்னது போல இன்று ஈரான் மீது தாக்கப்படலாம், முக்கிய தலைவர்கள் கொல்லப்படலாம். ஆனால், ஈரான் இந்த போரிலிருந்து பின்வாங்காது. அது பதில் தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்கும். ஈரானுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இதுதான். நேரடியான போரில் ஈரானால் ஜெயிக்க முடியாது. ஆனால், போரை நீண்ட காலத்திற்கு இழுத்தடிப்பதன் மூலம், அமெரிக்காவின் ராணுவ ஆயுத இருப்பை காலி செய்ய முடியும். இதன் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வரும்.இது சாத்தியமான விஷயம்தான். இந்த போரில் ஈரான் ஒரு ரூபாய் செலவு செய்கிறது எனில், அமெரிக்கா 20 ரூபாயைசெலவுசெய்கிறது.எனவே,அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு விரைவில் காலியாக கூடும். இதனால் அமெரிக்கா அடுத்த தாக்குதலை நடத்த யோசிக்கும். ஈரான் தனது செலவை சமாளிக்க கச்சா எண்ணெய்யைநம்பியிருக்கிறது. என்ன ஆனாலும், ஈரான் கச்சா எண்ணெய்யை வாங்கியே தீருவோம் என்று சீனா உறுதியாக இருக்கிறது. எனவே, கச்சா எண்ணெய் மூலம் வரும் வருமானத்தை ஈரான் ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்திக்கொள்ளும். மறுபுறம், ராணுவ ரீதியாக ஈரானுக்கு ரஷ்யா ராணுவ உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இதனால், ஆயுத பிரச்சனை ஈரானுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.