Others
டாக்டர் சரவணன்–தமிழகத்தில் டெங்கு நோய் பரவுவது அதிகரித்துள்ளது….?
அடைந்தனர்.தற்போது டெங்கு நோய் பரவுவது அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூவர், தேனி ,மதுரை, நெல்லை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இந்த 8 மாதத்தில் மட்டும் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்தாலும், அரசின் கணக்கை விட இன்னும் கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது. டெங்குவால் ஏழு பேர் பலியாகி உள்ளனர், பொதுவாக டெங்கு கொசு என்பது ஒரே நேரத்தில் ஆறு பேரை கடித்து பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்தான் அதிக பாதிப்பு இருந்தது. தற்போது அந்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துவிட்டது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாக வழக்கம் போல பத்திரிகை செய்தியை அரசு வெளியிட்டுள்ளது, குறிப்பாக இதுபோன்ற காலங்களில் எலி காய்ச்சல், காலரா, டைபாய்டு, மலேரியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் அதிகமாக பரவும்.இதுபோன்ற காலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான மருந்துகள் இருப்பு உள்ளதா? என்று அரசு வெள்ளை அறிக்கை விடவேண்டும், மேலும் தேங்கிய மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இல்லையென்றால் அந்தத் தேங்கிய மழைநீரில் இருந்து உருவாகும் கொசுக்கள் மூலம் காய்ச்சல் அதிகமாக பரவும், அதேபோல் குடிக்கும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் ஏற்பட்டு அதன் மூலம் காலரா போன்ற நோய்கள் வர வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும்.தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிக்கூடங்கள் தொடங்கிவிட்டன. தனியார் பள்ளிகளில் போதிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழக முழுவதுமுள்ள 58,879 அரசுப் பள்ளிகளில் கவனம் செலுத்தி, அங்கே மழை நீர் தேங்காமலும், மருத்துவமுகாம்களையும்நடத்திடவேண்டும்.தமிழக முழுவதுமுள்ள12,524 கிராம ஊராட்சிப் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில்2,000அம்மாமினிகிளினிக்குகள்உருவாக்கப்பட்டது.இதுபோன்றகாலங்களில்கிராமமக்களுக்குதேவையானமருத்துவவசதிகள்கிடைத்தது.அரசியல்காழ் புணர்ச்சிகாரணமாக அதை நிறுத்திவிட்டனர். ஆகவே கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்திடவேண்டும். எப்போதும் போல பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி பேட்டி கொடுப்பது மட்டும் அரசின் கடமை அல்ல. அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவை நேரடியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமித்து தகுந்த மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்திட வேண்டும். வழக்கம்போல அறிக்கை மட்டும் வெளியிட்டு கும்பகர்ணனைப்போல அரசு தூங்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்..