ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல்-முதற்கட்டத் வாக்குப்பதிவு தொடங்கியது….
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக இன்று காலை 7 மணிக்கு 43 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 (இன்று) மற்றும் 20-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதன் முதற்கட்டமாக இன்று காலை 7 மணிக்கு 43 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுஇந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவருகிறது. இரண்டு கட்சிகளுமே வலுவாக கூட்டணிகள் அமைத்துள்ளன. காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பா.ஜ.க கூட்டணியில் ஏ.ஜே.எஸ்.யூ, ஐ.ஜ.த, எல்.ஜே.பி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஜார்க்கண்ட்டை பொறுத்தவரை மொத்தம் 81 சட்டசபைத் தொகுதிகள் உள்ளது. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.நக்சலைட்கள் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படும் பகுதிகள் மற்றும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் ராணுவப் பாதுக்காப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.