ஜான் பாபு பாதிரியாரா ? கந்து வட்டி காரரா ? ஆய்வு செய்து நடவடிக்கை வேண்டும்..

பாதிரியாரா? கந்து வட்டி காரரா?
பணத்தைக் கொடு, இல்லனா பெண்ணை அனுப்பி விடு… அதிர்ச்சியில் கடன்காரர்கள்.. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியைச்சேர்ந்தவர் பாதிரியார் ஜான் பாபு இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை பூர்வமாகக் கொண்டவர்இவரின் மனைவி ராகேல் மாசிலாமணி திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அரசு மருத்துவமனையில் தற்போது செவிலியராக பணிபுரிந்து வருகிறார்இந்த நிலையில்.பாதிரியார் ஜான்பாபு ஆற்காடு, ராணிப்பேட்டை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைகளுக்குச் சென்று உபதேசம் செய்து வருகிறார் இது மட்டும் இல்லாம , ஆட்டோ ஓட்டுகிறார், பல இடங்களில் தண்ணீர் கேன் போடுகிறார் அதிலும் பிரதான தொழிலாக சிறு, குறு வியாபார வணிகர்களுக்கு தினவட்டி, மாதவட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருகிறார்.இப்படி இருக்க இவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் நம்மிடம் மனம் திறந்து பேசினார்
ஆற்காடு லேபர் தெருவை சேர்ந்த அஜித் குமார் நம்மிடம் ஆட்டோவில் பழவியாபாரம் செய்து வருவதாகவும் வியாபாரத்திற்காக வேப்பூர் பாதிரியார் ஜான் பாபுவிடம்100 ரூபாய்க்கு பத்து ரூபாய் வட்டி வீதத்தில் பத்தாயிரம் வாங்கி இருப்பதாகவும் கூறினார் இதுவரையில் நான்காயிரம் கட்டிருப்பதாகவும் மீதி 6 ஆயிரம் கட்ட வேண்டும் என்றார்.ஆற்காட்டில் பூ வியாபாரம் செய்து வரும் வேப்பூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் பேசிய போது பாதிரியார் ஜான்பாபு பத்து ரூபாய் வட்டிக்கு தான் பணம் தருவார் அவரிடம் அவசர தேவைக்கு பணம் வாங்கி கட்டி வருவேன் சமீபத்தில் மூன்று முறை ஒரு லட்ச ரூபாய் வாங்கி திரும்ப கட்டியுள்ளதாகவும் கூறினார் ஒவ்வொரு முறையும் பணம் வாங்கும்போது செக்சிலீப் பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொள்வார் வட்டி குறைப்புக்கு பேச்சே கிடையாது என்று கரராக பேசுவார் கடைசியாக வாங்கின ஒரு லட்சம் ரூபாய்க்கு 600 ரூபாய் வட்டி கட்டாமல் நின்றுவிட்டது.அதைக் கட்டிவிட்டு பாண்டு பத்திரம் வாங்கி செல்லுங்கள் என்று டிமாண்ட் செய்து வருகிறார் என்றார்.ஆற்காடு ஜீவானந்த சாலையில் வசித்து வரும் இஸ்லாமியர்
பாபு என்பவர் பேசியபோது ஜான்பாபுவிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கினேன் வடிகட்ட முடியாத நிலையில் வட்டி பணத்தை அசலுடன் சேர்த்து அதற்குரிய வட்டியை கட்ட சொல்லுவார் இப்படி வட்டிக்கு மேல வட்டியை போட்டு மூன்று லட்ச ரூபாய் ஆகிவிட்டது தற்போது வட்டி மட்டுமே வாங்கின பணத்தை விட அதிகமாக கட்டியுள்ளேன் பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளார்.தற்போது அசல் மட்டுமே கட்டுவதற்கு பேசி முடித்துள்ளோம் அவருக்கு மனசாட்சியே கிடையாது என்றார்.அதனைத் தொடர்ந்து
ஆற்காடு டவுன் தெருவை சேர்ந்த ராஜாவும் அவருடைய மனைவியும் நம்மிடம் பேசினர் பாதிரியார் ஜான் பாபு ஒவ்வொரு வாரமும் எங்கள் வீட்டிற்கு வந்து ஜெபம் செய்வார்
நாங்களும் அவரை அன்புடன் ஏற்றுக்கொண்டு உணவு மற்றும் காணிக்கை கொடுத்து அனுப்புவது வழக்கம் இந்த நிலையில் நாங்கள் வசித்து வந்த குடிசை வீடை அகற்றி அரசு வழங்கும் இலவச வீடு கட்டிக்கொள்ள அதிகாரிகள் ஆணை வழங்கினர்.வீடு கட்டுமான பணியை தொடங்கி வேலை செய்து வந்தோம் அப்பொழுது பாதிரியார் ஜான் பாபு வழக்கம் போல ஜெபம் செய்ய வந்தார் மேல் தளம் போடாமல் இருப்பதைப் பார்த்து நான் பணம் தருகிறேன் தளம் போட்டுக் கொள்ளுங்கள்.எப்ப முடியுமோ? அப்பொழுது திரும்ப தாருங்கள் என்றார் முதலில் தயங்கினோம் அதன் பிறகு ஒப்புக்கொண்டோம் முப்பதாயிரம், 20 ஆயிரம், பத்தாயிரம் என்று 7 தவணையாக இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தார்.முதலில் வட்டி வேண்டாம் என்று சொன்னவர் இரண்டு மாதத்திற்கு பிறகு பத்து ரூபாய் வீதம் வட்டி தர வேண்டும் இல்லையென்றால் பணத்தை உடனடியாக திரும்பத் தாருங்கள் என்று கட்டாயப்படுத்தினார்.எங்களால் தற்போது பணம் திரும்பத் தர முடியாது என்பதால அவகாசம் கேட்டோம் அதற்கு அவர் எங்களிடம் செக்சிலீப் மற்றும் பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்நாங்களும் வட்டி கட்ட ஒப்புக்கொண்டு மாதா, மாதம் இருபதாயிரம் வட்டி கட்டி வந்தோம். இரண்டரை வருடம் கடந்த பிறகு பாதிரியார் ஜான் பாபு எங்களிடம் வந்து பணத்தை திரும்ப கொடுங்க முடியலன்னா உன்னுடைய பெண்ணை அனுப்பிவிடு என்று மிகவும் கொச்சையாக பேசினார்.நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம் இவர் இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை இதனால் எங்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அதிலிருந்து எங்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் என்னுடைய பெண்பிள்ளைகள் வேலைக்கு செல்லும்போது பின் தொடர்ந்து செல்வது எதிரே வந்து வண்டியில் இடிப்பது பாலியல் செய்கை காட்டுவது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.மேலும் நாங்கள் கொடுத்த செக்சிலிப், பாண்டு பத்திரத்தை வைத்து 32 லட்சம் ரூபாய் வாங்கியதாக பொய் வழக்கு போட்டுள்ளார் கிறிஸ்தவ நீதி நெறிமுறைகளை போதிக்க வேண்டிய பாதிரியார் பொய்யனும் பொய்க்கு பிதாவுமாக இருக்கிறார் தற்பொழுது தான் தெரிய வந்தது இவர் போலி பாதிரியார் என்று இவர் மீது எஸ் பி இடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம் காவல்துறை அதிகாரிகள் தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.இந்த சம்பவம் தொடர்பாக பாதிரியார் ஜான் பாபுவைஅலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போதுநான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறேன்பிறகு பேசுகிறேன் என்றார்.அதன் பிறகு மீண்டும் அவரை தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போது அலைபேசியை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார் சில மணி நேரம் கழித்து மீண்டும் அவரை தொடர்பு கொண்டு பேசியபோது நான் பிரேயர் செய்து கொண்டிருக்கிறேன் பிறகு பேசுகிறேன் என்றான்இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் அவரை தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போது அழைப்பை துண்டித்து விடுகிறார்.வேடிக்கையா ஒரு கதையை சொல்லுவாங்க ஒரு ஊர்ல ஒரு பாதிரியார்இருந்தார் நல்லா பிரசங்கம் செய்யக் கூடியவர் ஒரு நாள்பக்கத்துவீட்டுக்காரர்கோழிஅவர்வீட்டுக்குவந்ததுஅதுஞாயிற்றுக்கிழமையா இருந்தது பாதிரியாரும் அவரின் மனைவியும் கோழியை கட்டி ஒரு கூடையில் மூடி வைத்துவிட்டு சர்ச்சுக்கு சென்று விட்டனர்அன்று சர்ச்சில் பாதிரியார் பிறர் பொருளை இச்சியாதிருப்பாயாக என்று பிரசங்கம் பண்ணினார் பிரசங்கத்தை கேட்ட பாதிரியாரின் மனைவிக்கு மனசாட்சி குத்தப்பட்டது சர்ச்சு முடிந்து வீட்டுக்கு வந்ததும் அந்தக் கோழியை அவிழ்த்து துரத்தி விட்டார் பாதிரியார் வீட்டுக்கு வந்ததும் கோழியை அடித்து ருசியா சமையல் செய்ய சொன்னார் அதற்கு பாதிரியாரின் மனைவி நான் சர்ச்சியில் பிரசங்கம் கேட்ட பிறகு மற்றவர்களின் கோழியை எப்படி சமையல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்
அதற்கு பாதிரியார் அடி பைத்தியக்காரி ஊருக்குத்தான் உபதேசம் உனக்கும் எனக்கும் கிடையாது என்றாராம்.,கிறிஸ்தவம் என்றாலே புனிதமானது அதில் இறை பணியை செய்கிறவர்கள் மதிப்புமிக்கவர்கள் ஜான் பாபு தன்னை பிஷப் என்றும் இறைப் பணியாளர் என்றும் சொல்லிக்கொண்டு கிறிஸ்தவ கொள்கை கோட்பாட்டிற்கு விரோதமாக பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதித்து வருகிறார் இவரிடம் பணம் வாங்கியவரிடம் பணம் கொடு அல்லது உன் பெண்ணை அனுப்பிவிடு என்று பாதிரியாரின் தன்மைக்கு வேறுபட்டு பேசிஇருக்கிறார் ரவுடிகள், கஞ்சா விற்பனையாளர்களுடன் ரகசிய ரகசிய தொடர்பில் இருப்பதாகவும் இவரைப் பற்றி தகவல்கள் கூறப்படுகிறது மேலும் இவருக்கு எப்படி? வருமானம் வருகிறது இவரிடம் உள்ள சொத்துக்கள் நியாயமான முறையில் சம்பாதித்தது தானா? என்று வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை வேண்டுமென இவரால் பாதிக்கப் பட்டவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
ஜான் பாபு போன்ற பாதிரிமார்களின் நடவடிக்கையால் தான் கிறிஸ்துவ மார்க்கத்திற்கு அவமரியாதையை உண்டாக்குகிறது என்பது வருத்தமான செய்தி.