fbpx
Others

துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல்…மாநிலம் ஆகுமா புதுச்சேரி…?

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தனிமாநிலமாக மாற்ற வேண்டும் என்பது அங்குள்ள பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆதலால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து கட்சிகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது  .கடந்த மாதம் புதுச்சேரி மார்ச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வந்த அரசு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில், மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானத்திற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.   இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான கோப்பு கடந்த ஜூலை 22ம் தேதி சனிக்கிழமை அன்று துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு வந்தது என்றும் விடுமுறை நாளான சனிக்கிழமையில் கோப்பு பெறப்பட்ட நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 23ம் தேதி அன்றே துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியதாகிவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close