fbpx
Others

சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில்என்ன நடக்குது.?

எங்கள் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக திருமதி. மாலதி அவர்கள் 16.3.24 அன்று மாறுதலாகி வந்தார். அவர் பொறுப்பேற்றது முதல் ஆசிரியர்களை மிரட்டுவதற்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.  எங்கள் பள்ளியில் உள்ள 58 ஆசிரியர்களில் 5 பேர் விழி மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், அவர்கள் எடுக்கும் பாடங்களில் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், தலைமை ஆசிரியை திருமதி. மாலதி வந்து 10 நாட்களில் முதன்மை கல்வி அலுவலருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், பார்வையற்றவர்கள் என்பதாலேயே அவர்கள் 5 பேரும் பாடம் எடுக்க தகுதியற்றவர்கள் என்ற வகையில் குறிப்பிட்டு அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றக் கோரினார்.இதனால் கொதிப்படைந்த 5 பேரும் தலைமை ஆசிரியர் தங்களை இழிவுபடுத்தி விட்டதாக கூறி, மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரைவிசாரித்துநடவடிக்கைஎடுத்துஅறிக்கைஅளிப்பதுடன்,சம்பந்தப்பட்ட5ஆசிரியர்களுக்கும் பதில் அனுப்பவும் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு பின் 8 மாதங்களாகியும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்தச் சூழலில், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு குரல் கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் திரு. சீனிவாசன், 10ம் வகுப்பு ஆசிரியை திருமதி மீனாட்சி ஆகியோர் மீது ஒரு பொய் புகார் கொடுக்கப்பட்டது. தமிழ்வாணன் என்ற மாணவரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக அந்த மாணவரின் தந்தை திரு.லோகநாதன் புகார் கொடுத்திருந்தார். மாணவர் தமிழ்வாணன் பள்ளிக்கு கத்தியுடன் வந்தது, போதைப்பொருள் கொண்டு வந்தது, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்தது போன்ற சம்பவங்களில் மாட்டி, முந்தைய தலைமை ஆசிரியர்கள் திரு.சக்திவேல், திருமதி. தமிழரசி ஆகியோர், மாணவரின் தந்தை திரு.லோகநாதனிடம் எச்சரித்து மன்னிப்பு கடிதங்களும் பெற்றுள்ளனர். இது பள்ளியில் அனைவருக்கும் தெரியும்.ஆனாலும், திரு.லோகநாதனின் பொய் புகாரை விசாரிப்பதாக கூறி, உடற்கல்வி ஆசிரியர் திரு.சீனிவாசனை தலைமை ஆசிரியை கடந்த 9.12.24 அன்று தனது அறைக்கு அழைத்து நிற்க வைத்து கடுமையாக பேசியிருக்கிறார். அச்சமயம், திரு.லோகநாதன் மற்றும் சமூக ஆர்வலர் என்ற பெயரில் திரு.குபேந்திரன் என்பவரையும் தலைமை ஆசிரியை அருகில் அமர வைத்து கொண்டு உடற்கல்வி ஆசிரியரிடம் குற்றம் செய்ததாக ஒப்பு கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதை சக ஆசிரியை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மற்ற ஆசிரியர்களாகிய நாங்கள் மறுநாளே (10.12.24) முதன்மை கல்வி அலுவலரிடம் ஒரு புகார் கொடுத்தோம். அதில், “தனக்கு பிடிக்காத ஆசிரியர்களுக்கு எதிராக சாதிப் பிரச்னையை பள்ளிக்குள் கொண்டு வருவது எங்கள் அனைவருக்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது பற்றி விசாரித்து தலைமை ஆசிரியர் மீதுநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றுகுறிப்பிட்டு43ஆசிரியர்கள்கையெழுத்திட்டுள்ளோம்.   அடுத்த நாளே ஆசிரியர்கள் திருமதி மீனாட்சி, திருமதி கல்பனா ஆகியோர் மாணவரின் தந்தையிடம் பேசியது வீடியோ எடுக்கப்பட்டு வெளியானது. அதில் வெட்டியும், ஒட்டியுமாக திருத்தப்பட்டு ஆசிரியர்களுக்கு எதிராக சித்தரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இதில் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தோம். இதன் பின்னர், பள்ளிக் கல்வி இணை இயக்குனர்(மேல்நிலைக் கல்வி) அவர்கள், பள்ளிக்கு 13.12.24 அன்று நேரில் வந்து பொய்ப்புகாரால் பாதிக்கப்பட்ட 2 ஆசிரியர்களிடமும், மாணவிகளிடமும் விசாரணை நடத்திச் சென்றார். தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்களால் நியமிக்கப்பட்ட கமிட்டி, 18.12.24 அன்று பள்ளிக்கு வந்து சுமார் 150 மாணவ, மாணவியர்களிடமும், ஆசிரியர்களிடமும் நேரில் விசாரணை நடத்தியது. கமிட்டியில், சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் இடம் பெற்றனர். அவர்கள் ஆட்சியரிடம் அளித்த அறிக்கை இது வரை வெளியிடப்படவில்லை.பள்ளி விடுமுறைக்கு முன்பு கடைசி நாளில் (23.12.24) வாட்ச்மேன் கார்த்தி, தோட்டக்காரர் சரவணன் ஆகியோரை பள்ளியில் தங்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர் திருமதி. மாலதி அவர்கள் வெளியேற்றி விட்டார். அந்த 2 பேரும் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக பள்ளியிலேயே இரவு தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர்கள். அவர்கள் திடீரென வெளியேற்றப்பட்ட காரணம் தெரியவில்லை.ஆனால், அன்று இரவு மாணவர் தமிழ்வாணன் பள்ளி வாயில் முன்பாக நின்றபடி மீண்டும் அந்த 2 ஆசிரியர்கள் மீது பொய்ப் புகார் கூறி, வீடியோ எடுக்கப்பட்டு அது மறுநாள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால், ஆசிரியர்கள் அனைவருக்கும் தலைமை ஆசிரியர் மீது மீண்டும் சந்தேகம் வலுத்தது. அத்துடன் தலைமை ஆசிரியர் மற்றும் பொய் புகார் கொடுத்தவர்கள் தினமும் ஒவ்வொரு மீடியாவுக்கும் சென்று அந்த 2 ஆசிரியர்கள் மீதும் அவதூறாக குற்றம்சாட்டி செய்தி வெளியிட்டு வந்தனர். The Hindu பத்திரிகையில் இந்த செய்தி வெளியானதும், ஆசிரியர்கள் திருமதி மீனாட்சி, திரு. சீனிவாசன் மற்றும் பெற்றோர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து அதுவும் மறுநாளே வெளியானது.பெருமை மிக்க எங்கள் பள்ளியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் தலைமை ஆசிரியரே ஈடுபட்டு வருவது எங்களுக்கு
அதிர்ச்சியாக இருக்கிறது. பள்ளிக்குள் யார் அத்துமீறி வீடியோ எடுத்தது? அந்த வீடியோவை வெளியிட்ட சமூக ஆர்வலர் என்ற திரு.குபேந்திரன் மீது ஏன் தலைமை ஆசிரியை காவல் துறையில் புகார் கொடுக்கவில்லை? என்றஅடுக்கடுக்கானகேள்விகளுக்குபதில்இல்லை .இவ்வளவுக்குப் பிறகும் தலைமை ஆசிரியை மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எனவே, அவரை மாற்றக் கோரியும், பள்ளிக்குள் வீடியோக்கள் எடுத்து அவதூறாக மார்பிங் செய்து வெளியிட்டது குறித்து காவல் துறை விசாரணை நடத்தக் கோரியும் நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளோம். எங்களுக்கு தமிழ்நாடு முழுக்க உள்ள ஆசிரியர் பெருமக்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்று இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.

பதிப்பகச் செம்மல் கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்.

Related Articles

Back to top button
Close
Close