fbpx
Others

சென்னை உயர் நீதிமன்றம் — ப்ளூகிராஸ் அமைப்பை ஏற்று நடத்த கோரிய வழக்கு.

புளூ கிராஸ் அமைப்பை ஏற்று நடத்தும்படி தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய இயக்குனரகத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புளூ கிராஸ் அமைப்புக்கு எதிரான புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கடந்த பிப்ரவரி மாதம் திடீர் ஆய்வு நடத்தியது. அதில், புளூ கிராசில் பராமரிக்கப்படும் நாய், பூனைகளுக்கு முறையாக உணவளிக்கப்படுவதில்லை.முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டது. புளூ கிராஸ் அமைப்புக்கு தமிழக அரசு நிலம் வழங்கியுள்ளதால் அரசே அதனை ஏற்று நடத்த வேண்டும்.உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பெருமளவில் நிதி பெறுகிறது புளூ கிராஸ். எனவே, அதன் நிதி விவரங்களை வருமான வரித் துறை மூலம் தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடைத் துறை, இந்திய விலங்குகள் நல வாரியம், வருமான வரித் துறை, புளூ கிராஸ் அமைப்பு ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Related Articles

Back to top button
Close
Close