fbpx
Others

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் பட வழக்கு…

மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) ஏ.ஆர்.எல். சுந்தரேசன் முன்வைத்த வாதங்களில் ஜனவரி 5-ம் தேதி தயாரிப்பாளர் மனுத் தாக்கல் செய்தபோதே, படத்தை ‘மறுஆய்வுக் குழுவுக்கு’ (Revising Committee) அனுப்பத் தணிக்கை வாரியத் தலைவர் முடிவெடுத்தது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பு அந்த முடிவை எதிர்த்து வழக்குத் தொடரவில்லை. மாறாக படத்திற்கு சான்றிதழ் வழங்க கேட்டிருந்தனர். ஏற்கனவே நாங்கள் ‘மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதை அவர்கள் குறிப்பிடவில்லை.இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தனி நீதிபதி முன் நடைபெற்றது. ஜனவரி 9-ம் தேதி தனி நீதிபதி தீர்ப்பளித்தார். தயாரிப்பாளர் தரப்பு ‘U/A 16+’ சான்றிதழ் வழங்க மட்டுமே கோரியிருந்த நிலையில், வாரியத் தலைவரின் உத்தரவைத் தனி நீதிபதி ரத்து செய்தது சரியல்ல. தயாரிப்பாளர் தரப்பு அதை கோரிக்கையாக வைக்கவில்லை. மேலும் தணிக்கை வாரியத்தின் மண்டல அதிகாரி டிசம்பர் 22-ல் அனுப்பிய கடிதம், ‘ஆய்வுக் குழுவின்’ (Examining Committee) பரிந்துரை மட்டுமே. அதில் 14 காட்சிகளை நீக்கினால் ‘U/A 16+’ சான்றிதழ் வழங்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இது தணிக்கை விதிகளின்படி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல, ஒரு இடைக்காலத் தகவல் மட்டுமே. டிசம்பர் 29-ம் தேதி, டெல்லியில் உள்ள தணிக்கை வாரியத் தலைமையகம், ஜனநாயகம் படத்திற்கு எதிராகப் புகார் வந்துள்ளதால், சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்குமாறு மண்டல அதிகாரியைப் பணித்தது. இது ஜனவரி 5-ல் தயாரிப்பாளருக்குத் தெரிவிக்கப்பட்டது.72 நிமிடங்களுக்கு மேல் ஓடும் படங்களுக்குத் தணிக்கை வாரியத் தலைவரே இறுதி முடிவெடுக்க அதிகாரம் கொண்டவர். இந்தப் படத்தின் விஷயத்தில், வாரியத் தலைவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று வாதம் வைத்தார்.டிசம்பர் 22-ம் தேதி கடிதத்தை அனுப்பியது யார்? அது தணிக்கை வாரியத்தின் முடிவா அல்லது ஒரு ஆலோசனைக் குழுவின் முடிவா? என நீதிபதிகள் வினவினர். ஜனநாயகன் படத்தை யார் பார்த்தது மண்டல அதிகாரி படத்தைப் பார்த்தாரா? எனத் தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு ASG “இல்லை, ஆய்வுக் குழு மட்டுமே பார்த்தது” எனப் பதிலளித்தார். அதைக் கேட்ட நீதிபதிகள், “அப்படியென்றால் ஆய்வுக் குழுவை முழு வாரியமாகக் கருத முடியாது; அது ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே” எனக் குறிப்பிட்டனர்.ஒருவேளை தனி நீதிபதி இந்த வழக்கை இன்னும் விரிவாக விசாரித்திருந்தால், வாரியம் நேரடியாகப் படத்தைப் பார்த்ததா அல்லது ஆய்வுக் குழு போன்ற ஒரு அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்பின் மூலம் பார்த்ததா என்ற சட்ட நுணுக்கம் தெளிவாகியிருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மும்பைஅல்லதுடெல்லியில்இருக்கும்வாரியஉறுப்பினர்கள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் படங்களையும் பார்ப்பதுசாத்தியமில்லை.அதனால்தான் ஆய்வுக் குழுக்கள் மற்றும் மறுஆய்வுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர், இதை தொடர்ந்து வழக்கில் வாதம் நடைபெற்று வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close