fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

டெல்லி: தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒத்துக்கொண்டுள்ளது..

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் நம்பிக்கை இல்லை என்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறப்பட்டது.

இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 16-ஆம் தேதி அளிக்கப்பட்டது. இதை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வும் தீர்ப்பு அளித்தனர். அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில் சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது. அவரது முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார். இதையடுத்து நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.

அப்போது சுந்தர் கூறுகையில் சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது என்று தீர்ப்பளித்தார். இரு நபர்கள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கு 3-ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

தகுதிநீக்க வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை  வழங்கியதால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதி விமலாவிடம் சென்றுள்ளது. இந்நிலையில் மாறுபட்ட தீர்ப்பாலும் 18 தொகுதிகள் மட்டுமல்லாது அனைத்து தொகுதிகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்த கோரியும் தங்கதமிழ் செல்வன் மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்றார்.

தகுதிநீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறி தங்கதமிழ் செல்வனை தவிர மீதமுள்ள 17 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்கள். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல், அருண் மிஸ்ரா ஆகியோர் முன்பு வரும் 27-ஆம் தேதி விசாரணை நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close