fbpx
Others

சென்னையில் 77ஆவது குடியரசு தினவிழா….

 77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் முதல்வர் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார். ஆளுநர் ரவிதேசியக்கொடிஏற்றிவைத்தபின் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இதைத்தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையின் துறை சார்ந்தவாகனஅணிவகுப்புநடைபெற்றது.தொடர்ந்து முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பார். மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்க 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  குடியரசு நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய விருதுகள் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்   நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுனர் சங்கர்   தீயணைப்பு துறையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ரமேஷ்   கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பீட்டர் ஜான்சன்   கோட்டை அமீர் மத நல்லிணக்கவிருது  திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கலிமுல்லா  சிறந்த நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு விருது    தஞ்சாவூரைச் சேர்ந்த வீரமணி     சிறந்த காவல் நிலையத்திற்கானவிருது முதல் பரிசு மதுரை மாநகரம்   இரண்டாவது பரிசு திருப்பூர் மாநகரம்  மூன்றாவது பரிசு கோயம்புத்தூர் மாவட்டம்   காந்தியடிகள் காவலர் பதக்கம்   விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன்   விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன்   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன்   கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன்    சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன்..

Related Articles

Back to top button
Close
Close