fbpx
RETamil Newsஇந்தியா

ஊரடங்கால் இந்தியாவில் காற்று மாசு குறைந்துள்ளது ; உணர்த்தும் நாசா செயற்கைகோள் படம்

உலகமே இன்று கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயால் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருவதால் உலக மக்கள் பலரும் அதிக அளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் இயற்கையும் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுற்றுசூழல் மாசு கணிசமாக குறைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் ஊரடங்கு அமல்செய்யப்பட்டுள்ளதாலும் , அதன் மூலம் வாகனங்கள் போக்குவரத்து மற்றும் தொழிற்ச்சாலைகள் இயக்கப்படாமல் உள்ளதால் சுற்று சூழல் காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக அனைவருக்கும் தெரிந்ததாகும்.

தற்போது இதை உறுதி படுத்தும் விதமாக நாசாவின் செயற்கைக்கோள் படம் பிடித்த இந்தியாவின் புகைப்படம் சில நம்பமுடியாத அதிர்ச்சி தகவலை பதிவு செய்துள்ளது.

நாசா செயற்கைகோள் பதிவு செய்துள்ள தகவலின் விவரங்களை பார்க்கலாம் ;

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைகோள் மார்ச்-31-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதிக்கு இடையில் படம்பிடித்துள்ள புகைப்படத்தில் வட இந்தியாவில் காணப்படும் காற்றுமாசின் (ஏரோஸோல்) அளவு இதுவரை பார்க்காத அளவிற்கு குறைந்துள்ளது பதிவாகியுள்ளது.

இது கடந்த 20 ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத மிகக்குறைந்த அளவு காற்றுமாசு மதிப்பீடு இந்த ஆண்டு தான் பதிவாகியுள்ளது என்று நாசா அதிர்ச்சி தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

நாசாவால் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் இந்த பதிவு , இந்த ஆண்டில் நம்பமுடியாத தகவலை பதிவு செய்துள்ளது. மானுடவியல் என்று கூறப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட மூலங்களில் இருந்து வெளிவரும் நஞ்சு காற்றுமாசுகள் பல இந்திய நகரங்களில் ஆரோகியமற்ற அளவிலான காற்று மாசுபாட்டிற்கு காரணமாக இருக்கிறது என சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இந்த காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் மனிதர்கள் தான் என்பதே மறைக்கப்படாத உண்மை.

காற்று மாசு ஏரோசோல்கள் இருவகைகளில் உள்ளது. அவை இயற்கையாக உருவாகும் ஏரோசோல்கள் , மனிதனால் உருவாக்கப்படும் ஏரோசோல்கள் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இயற்கையில் உருவாகும் தூசு, புயல்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் கட்டு தீ இத்தகை இயற்க்கை ஆதாரங்கள் ஒரு வகையான எரோசொல்களை வெளியிடுகின்றன.

அதேபோல் புதைபடிவ எரிபொருட்கள் மற்றும் பயிர்நிலங்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளில் இருந்து ஒரு வகையான ஏரோசொல்கள் வெளியாகும் அவைகளே காற்றை மாசுபடுத்துகின்றன.

இவ்வாறு மனிதனால் உருவாக்கப்படும் ஏரோசோல்கள் தான் மனித வளத்தின் ஆரோகியத்தை சேதப்படுத்தும் அதிக ஆற்றலை கொண்டுள்ளது என்கிறது ஆய்வாளர்களின் அறிக்கை.

பெரிய அளவில் மனிதனின் ஆரோகியதை சீரழிப்பதே இந்த சிறிய துகள்கள் தான் பெரிய பங்கு வகிக்கிறது என்பது அறிவியல் உண்மை.

இதனால் அதிக அளவில் பாதிப்படைபவர்கள் குழந்தைகளும், முதியவர்களும் தான் என்பது சமீபத்திய கணக்கெடுப்பு.

நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மையத்தின் பல்கலைக்கழக ஆராய்ச்சி சங்கத்தின் யு எஸ் ஆர் ஏ விஞ்ஞனி பவன் குப்தா கூறியதாவது;

ஊரடங்கின் போது பல இடங்களில் வளிமண்டல அமைப்பில் மாற்றங்களை காண்போம் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் இந்த ஆண்டு இந்தோ -கங்கை சமவெளியில் ஏரோசல் மதிப்புகள் மிகக் குறைவாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது நம்பமுடியாத உண்மையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close