
இன்று உலகையே கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்று நோய் அச்சுறுத்திவரும் நிலையில் அதனால் பல உயிர்கள் பலியாகியுள்ளனர். மேலும் இந்த தொற்று நோயால் பல லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த கொடிய உயிர்கொல்லி நோய்க்கு மேலே நாடுகள் மட்டும் அல்லாமல் அணைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது இந்தியாவிலும் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸை தடுக்க நாடு முழுவதிலும் உள்ள மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.அதேபோல் தமிழகத்திலும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

இப்போது சென்னையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார், அதில் அவர் கூறியிருப்பதாவது;
தொற்றுநோய் சட்டம், பொது சுகாதார சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த நேரம் வரை பொதுமக்கள் வெளீயே நடமாடுகிரார்களோ அந்த நேரம் வரை அவர்கள் முக கவசத்தை அணிய வேண்டும். இந்த உத்தரவை பொருட்படுத்தாமல் முக கவசம் அணியாமல் வெளியே சென்றால் அவர்கள் வெளியில் செல்வதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி பாஸ் ரத்து செய்யப்படும், அவர்களுடைய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு , 3 மாதங்கள் வரை வழங்கப்படாது.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் சென்னை, திருப்பூர் , கோவை ஆகிய 3 மாவட்டங்கள் முதல் இடத்தை வகிக்கின்றன. எனவே அந்த 3 மாவட்டங்களிலும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இது தொடர்பான உத்தரவு விரைவில் பிரிப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.