fbpx
Others

செங்குன்றம்-சிலம்ப மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி !

செங்குன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் சக்தி பிரகாஷ் தற்காப்பு சிலம்பக் கலைக்கூட சிலம்ப மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி சிலம்ப பயிற்சி திடலில் நடைபெற்றது.
சிலம்ப நிறுவனர் சக்தி பிரகாஷ் ஆசான் தலைமை தாங்கினார்.தேசிய சிலம்ப நடுவர்.
ஆர். முருகக்கனி ஆசான், திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் பேரவை தலைவர்,
சி. நந்தகுமார் கவிஞர். ராமன், மாஸ்டர். ரிஸ்வான் பாஷா முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் சத்யநாராயணன், ரேகா, தட்சிணாமூர்த்தி, ஷாலினி அனைவரையும் வரவேற்றனர்.சிறப்பு அழைப்பாளராக காவல் ஆய்வாளர்.ஜி. புருஷோத்தமன் கலந்து கொண்டு தகுதி பட்டைகள் வழங்கி பேசும்போது தன்னம்பிக்கை வருவதற்கு தற்காப்பு கலை பயிற்சி அவசியம் இளைய சமுதாயம் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் இதுபோன்ற தற்காப்பு கலைகளை பழக வேண்டும் இதற்கு உறுதுணையாக இருக்கும் ஆசான்களையும், பெற்றோர்களையும் பாராட்டுகிறேன் என்றார்.வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர் ஜி.பி. முனுசாமி பம்மது குளம் ஊராட்சி மன்ற தலைவர். ராஜா, சிறப்பு பயிற்சியாளர் கோதண்டன், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.வாட்டர் கோபி, கொரட்டூர் ரமேஷ், பாக்சர். விஜயகுமார், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் கலைச்செல்வன், ப்ரியா இருவரும் நன்றி கூறினர்.

Related Articles

Back to top button
Close
Close