fbpx
Others

செங்குன்றம்–சம்பள பாக்கி தகராறில் ஆசிட் பாட்டில் வீசிய மளிகை கடை வியாபாரி….

இருவருக்கு காயம்!
சம்பள பாக்கி தகராறில் ஆசிட் பாட்டில் வீசிய மளிகை கடை வியாபாரிக்கு சிறை!!  செங்குன்றம் துரைஅப்துல்வகாப் தெருவில் மளிகை கடை நடத்துபவர் ரங்கன் (55) இவரது கடையில் வேலை பார்த்தவர் வடமாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் (19) .இவருக்கு சம்பள பாக்கி இருந்தது என்றும் அதை கேட்கும் போது இருவரும் இடையே தகராறு ஏற்பட்டது அப்போதுகடையில்இருந்தடாய்லட்கிளீனிங்ஆசிட்பாட்டிலைரங்கன்தூக்கிஅடித்துள்ளார்.  இதில் சந்தோஷ் காயமடைந்தார் அதுமட்டும் அல்லாது கடைக்கு பொருட்கள் வாங்க வந்த உமாயூன் (35) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.‌தகவலறிந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர். விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கனை கைது செய்து வழக்கு பதிவு செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்.‌காயமடைந்த சந்தோஷ்‌‌, உமாயூன் இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு‌ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close