செங்குன்றம் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
செங்குன்றம் காவல் நிலையம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி! ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் மாவட்டம் சார்பில் செங்குன்றம் ஒரக்காடுஆர். கோவிந்தராஜுலுநாயுடு. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.செங்குன்றம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர். விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர். பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களிடம் போதை விழிப்புணர்வு குறித்து விளக்கினார்.மேலும் போதை விழிப்புணர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் போதை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை கடைவீதிகளில் ஒட்டி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் செங்குன்றம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஆண்டலின் ரமேஷ், ஜனார்த்தனன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன், உதவி தலைமை ஆசிரியர்கள் அய்யனார், உதயகுமார் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.