செங்குன்றதில்100வது மருத்துவ முகாம்….

செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் மற்றும் ஸ்ரீ சத்திய சாய் சேவா நிறுவனம் இணைந்து நடத்திய 100வது மருத்துவ முகாமை முன்னிட்டு மருத்துவர்கள், சேவா தொண்டர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் நெல் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கத் தலைவர் டி.கோபி தலைமையில் சங்கத் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.சங்க துணைத்தலைவர் சாய் எம்.ஜெயபால், செயலாளர் ஏ.லோகநாதன், பொருளாளர் கே.என். குணசேகரன் முன்னிலை வகித்தனர்.ஸ்ரீ சத்திய சாய் சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு வடக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆர். சந்திரசேகர், 3241 ஏ மாவட்ட ஆளுநர் பி.மணிசேகர், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளனத்தலைவர்டி.துளசிங்கம்ஆகியோர்சிறப்புஅழைப்பாளர்களாககலந்துகொண்டனர். மருத்துவர்கள், சேவா தொண்டர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கப்பட்டது.