fbpx
Others

சுந்தராபுரம் பகுதி அ.தி.மு.கதிமுக முன்னால் முதல்வர்களின் பிறந்தநாள் முப்பெரும் விழா..

கோவை, பிப்., 08 :

கோவை சுந்தராபுரம் பகுதி கழகம் சார்பாக அ.தி.மு.க முன்னால் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னால் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், நிர்வாகிகள் மகாலிங்கம், கே. சண்முகராஜா, ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் 400 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள், 4 நபர்களுக்கு சலவை இயந்திரம், சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த கழக நிர்வாகி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் குடும்பத்திற்கு கட்சி நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குறிச்சி எம். மரியா தலைமை தாங்கினார். இதில் ஏ. சேகர், ஜெ. பரத், கலாமணி தங்கராஜ், நிஜாம், தனகோபால், ரவிச்சந்திரன், ராஜநாயகம், கற்பகம் சிவா, துறைசாமி, சரவணன், அப்பாஸ், போட்டோ ஆறுமுகம், ஏ. முருகேஷ், காளிதாஸ், கார்திக், சிவக்குமார், மெஸ் வேலுச்சாமி உள்பட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Articles

Back to top button
Close
Close