fbpx
Others

சிறுவாபுரி–பாலசுப்பிரமணிய சுவாமியைகாத்திருந்து பக்தர்கள் தரிசனம்…

சிறுவாபுரியில் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த பாலசுப்பிரமணிய சுவாமியை
3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பெரியபாளையம்,ஜன7-
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்களான வீடு,மனை,வேலை வாய்ப்பு, திருமணம்,பிள்ளைபேரு உள்ளிட்டவை நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.இந்நிலையில், நேற்று 2026-ம் ஆண்டின் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் இத்திருக்கோவிலுக்குவிடியற்காலை முதலே ஏராளமான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக கட்டுக்கடங்காத வகையில் வந்த வண்ணம் இருந்தனர்.இதனால் சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இதனால் சிறப்பு தரிசன வரிசைகள் சுமார் 800 மீட்டர் தூரமும்,பொது தரிசன வரிசைகளில் நீண்ட தூரமும் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சிறப்பு தரிசன வரிசை பல மீட்டர் தூரம் நீண்டு சென்றதாலும், இரண்டு மூன்று வளைவுகளாக இந்த வரிசை நீண்டு இருந்ததாலும் போலீசாரால்வரிசையைசீரமைக்கமுடியாமல்திணறியதால்பரபரப்புஏற்பட்டது.மேலும்,  போதிய அளவு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்யவில்லை என பக்தர்கள் அதிருப்தியுடன் கூறினர்.நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் மூலவருக்கு ஆனந்தன் குருக்கள் தலைமையில், திருக்கோவிலின் செயல் அலுவலர் மாதவன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பால்,தயிர்,விபூதி சந்தனம்,ஜவ்வாது,இளநீர்,தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால்அபிஷேகம் செய்தனர்.இதன்பின்னர்,ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close