fbpx
RETamil News

மத அரசியலாக மாறி வரும் கொரோனா வைரஸ்

ஒரு வைரஸ் ஒட்டுமொத்தமாக மனித குலத்திற்க்கே தீங்காக இருக்கு என்று பார்த்துட்டு இருக்கும் பொழது தான் இந்த வைரசால் நடத்தப்படும் வியாபாரமும் மனித குலத்திற்கு மிகவும் தீங்கானது என்ற உலக அரசியலை நாம் முன்பு பாத்தோம். இப்போ இதெல்லாம் போய் மத அரசியலும் இதன் மூலமாக தொடங்கியுள்ளது.

மலேசியாவில் தப்லிக் ஜமாத் மட்டும் கூடவில்லை அவர்கள் மார்ச் 12 தேதிக்கு முன்னரே தங்களின் கூட்டத்தை முடித்து விட்டார்கள் அதற்க்கு முன்பாக ஹிந்துக்கள் அங்கு கூடி மகாமகம் எல்லாம் நடத்தினார்கள் அதை பற்றி யாரும் பேசவில்லை.

முதலில் நாம் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் வைரஸின் ஸ்டேஜ் ஒன் என்பது வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்களால் தான் அதிகமாக பரவுகிறது. அதனால் தப்லீக் ஜமாத் என்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இதன் காரணமாகத்தான் உலக மீடியாக்கள் இந்த தப்லிக் ஜமாத் பற்றி அதிக அளவில் பேசப்படுகின்றது. ஆனால் இந்த மகாமகம் பற்றி அதிக அளவில் பேசப்படவில்லை. அப்படியென்றால் இந்த மகாமகம் கொண்டாடியது தவறில்லை என்று சொல்லமுடியுமா அதுவும் தப்பு தான்.

இந்த வைரசுக்கு இந்து, முஸ்லீம், கிறிஸ்டின் இந்த வேறுபாடு எல்லாம் கிடையவே கிடையாது. அப்படியென்றால் இந்தமாதிரியான ஒரு கூட்டம் இந்துக்கள் செய்தாலும் தப்புதான் இஸ்லாமியர்கள் செய்தாலும் தப்புதான்.

சவுத் கொரியா நாட்டில் அதிக அளவில் வைரஸ் தாக்குதல் உண்டாவதற்க்கான காரணம் என்னவென்றால். அங்குள்ளகிருஸ்துவ மதத்தின் ஒரு பிரிவு. அவர்கள் என்னசொன்னார்கள் என்றால் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால் இறைவனை தேடி வாருங்கள் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்லி ஒரு 2.50 லட்சம் நபர்களுக்கு புதிய உலகம் புதிய சொர்க்கம் காண்பிக்கிறோம் என்று அழைப்பிதழ் கொடுக்கிறார்கள். இப்படி அழைப்பிதழ் கொடுத்ததை நிறைய நபர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இங்கேதான் நாம் ஒரு பெரிய பிரச்சனையை நாம் பார்க்கவேண்டியுள்ளது.

இங்கு ஒரு மதத்தை ஊட்டி வளர்ப்பதற்கு மத குருக்கள் அல்லது இந்த மதத்தை போற்றி வளர்ப்பதற்கு நிறைய பேர் இருக்காங்க. இவர்கள் என்ன நினைக்கிறார்கள் மக்கள் தனி தனி இடத்தில் பிரிஞ்சி இருந்தால் சரியாநாவிதத்தில் இந்த மாதிரியான பூஜைகள் நடக்கப்பட வில்லையென்றால் , அல்லது மதவழிபாட்டு தளத்தில் வழிபாடு நடத்தவில்லையென்றால் மதத்தின் மீதான மக்களின் பற்று குறைந்து விடும் அதை குறைந்து விடாமல் தடுப்பதற்காக ஒரு கூட்டத்தின் மிகப்பெரிய குறிக்கோளாக இருக்கிறது அந்த கூட்டத்தில் இருந்து நாம் தப்பித்து கொள்ள வேண்டும் என்று தான் சொல்கின்றோம்.

இப்பொழுது இந்த வைரஸை வைத்து அடுத்ததா ஒரு மிகப்பெரிய வியாபாரம் நடக்க போகுது அது தான் மதம்.
எங்கள் மதத்தில் வந்தால் உங்களுக்கு வைரஸ் தாக்காது அல்லது கூட்டு பிரார்த்தனை அதாவது ரகசிய பிரார்த்தனை இது எதுவுமே நடக்காது என்று நினைத்தாள் அது தப்பு. ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாடியும் காவலுக்கு போலீசை நிறுத்தி வைக்க முடியாது.

ஆனால் இந்த மதகுருக்கள் என்ன செய்வதற்க்கான வாய்ப்புகள் இருக்கு தெரியுமா இந்த வீட்டுக்குள்ளே எல்லாரும் சேர்ந்து நாம் பிரார்த்தனை செய்யலாம் அதன் மூலம் கண்டிப்பா இந்த வைரஸை அழித்துவிடலாம் என்று சொல்லி எல்லா மதகுருக்களும் அதாவது மதத்தின் மீது தீவிரமாக இருக்கும் சில நபர்கள் உங்களை இந்த கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பார்கள் தெய்வசெஞ்சி நாம் அவரது பக்கம் போய்விடக்கூடாது.

பொதுவாக மதம் என்ன சொல்லுதுன்னா அமைதியை தான் விரும்புது . யாரையும் யாருக்காகவும் துன்புறுத்த கூடாது. நிச்சயமாக உனக்கான அமைதி உன் மனத்திற்க்கான அமைதி நான் தருவேன் அதுதான் நம் மதம் சொல்கிறது. அந்த கடவுள் சொல்கிறார் என்று சொல்ல மாட்டோம் அந்த கடவுள் பேரில் ஏற்பட்டிருக்கும் மதங்கள் சொல்கிறது. இப்போது நம் மனதில் வருவது இந்த தப்லிக் ஜமாத்தில் இருந்த தமிழ்நாட்டில் வந்தவர்கள் மூலமாகத்தான் இங்கு வைரஸ் தொற்று சிறிதாவது பரவிருக்கு என்று சொல்லப்பட்டுள்ளது.

இன்னொரு முக்கியமான விஷயம் ராம் லல்லா என்ற விஷயம் நடந்தது தெரியுமா உத்திரபிரதேசத்தில் நடந்த ஒரு விஷயம் ராமர் கோவில் கட்டலாம் என்ற ஒரு அறிவிப்பு வந்தது அதுவும் ஊரடங்கு உத்தரவு இந்திய முழுவதும் கடைபிடிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் நாங்கள் ராமர் கோவில் கட்டுவதற்க்கான ஆயத்த பணிகளை செய்யப்போகிறோம் என்று சொல்லி உத்திரபிரதேசத்திம் முதலமைச்சர் இந்தமாதிரியான விஷயத்தை செய்யலாமா. குழந்தை ராமர் சிலையை எடுத்து வேறொரு இடத்தில் வைக்க போகிறோம் அதற்கான பூஜைகள் விடியற்காலை 4 மணிக்கெல்லாம் நடைபெற்றிருக்கிறது அதை பிலால் போட்டோகிராப் எடுப்பதற்க்கான ஆட்கள் முதலமைச்சர் அவரது காவலர்கள் இவர்கள் எல்லாரும் இந்த ஒரு விழாவில் கலந்துகொண்டுள்ளார்கள். இது ஒரு பெரிய முட்டாள்தனம் தான் சொல்லமுடியும் ஒரு அரசாங்கம் சொல்லுது அதாவது நம் பிரதமர் சொல்கிறார் நம் வீட்டை விட்டு யாரும் வெளியில் வரக்கூடாது என்று மேலும் எல்லா வழிபாடுதளங்கள் எல்லாம் மூடிவிடுங்கள் என்று சொல்லும் போது ஒரு வழிபாடு தளம் மாட்டு திறந்து அங்கு இந்தமாதிரியான சில வழிபாடுகளை நடத்தலாம் ? இந்த கேள்வியை எல்லாரும் கேட்கவேண்டியது தான் அப்படி அந்த முதலமைச்சரிடம் கேட்கும் போது நாங்கள் பொதுமக்கள் கூடுவதற்க்காக இந்த விழாவை நடத்தவில்லை எங்களோட வழிபாட்டு தளத்தில் தான் நாங்கள் எங்கள் விழாவை நடத்துகிறோம் என்று கூறினார்..

இதேமாதிரி ஒவ்வொரு வழிபாட்டுத்தளமும் திறந்து நாங்கள் எங்களின் விழாவை நடத்துகிறோம் என்று சொன்னாள் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் வரும். இங்கே பிரச்சினை மதத்தின் மீதோ அல்லது கடவுளின் மீதோ கிடையாது அதை பின்பற்றுகிற முட்டாள்களின் மெது என்று சொல்லலாம். அங்கு அவர்கள் அவர்களுக்காக மட்டும் பிரார்தனை செய்கிறார்களா அல்லது வைரஸை பரப்புகிறார்களா என்று கேட்டால் உலகம் தான் அதற்கு சாட்சியாக இருக்கிறது.

ஈரானில் வைரஸ் பரவுவதற்கான காரணம் மதம் தான் , பாகிஸ்தானில் வைரஸ் பரவுவதற்கான காரணம் மதம் தான் , மலேசியாவில் வைரஸ் பரவுவதற்கான காரணம் மதம் தான் அதே போல் இந்தியாவிலும் வைரஸ் பரவுவதற்கான காரணம் மதம் தான்.

இப்போது மதம் சார்பாக சில பொய் பிரட்டுகள் பரப்பப்படுகிறது அது மட்டும் அல்லாமல் வைரஸும் பரப்பப்படுகிறது. சில நாட்களுக்கு பின் இந்த வைரஸின் தாக்கம் முடிந்து விட்டது நீங்கள் வெளியில் வந்து உங்கள் மத வழிபாட்டை செய்யலாம் என்று சொன்னால் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்க்காவது நீங்கள் எந்த கோவிலுக்கோ , மசூதிக்கோ அல்லது சரசுக்கோ போகவேண்டாம் சில விஷயங்கள் நாமே நமக்கு போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்கு பின்பும் நாம் நம் கடவுளை கும்பிட்டால் அவர் அங்கேதான் இருப்பரர் நமக்கு எல்லா ஆசிகளையும் வழங்குவார். நாம் எதற்காகவும் பயப்படவேண்டாம் நம் கடவுள் நம்மை எதர்க்காகவும் துன்புறுத்தமாட்டார். இப்போ இந்தியாவில் எந்த நிலைமை என்று பார்த்துட்டோம்.

நாம இப்போ படிப்பறிவு இல்லாத ஏழை நாடு என்ன செய்கின்றது என்று கேட்டால் ரொம்ப மோசம் கென்யா அதாவது 24 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் பரவி இருக்கிறது இதை பற்றி எதாவது தொலைக்காட்சிகள் சொல்கிறதா இல்லை. நாம் எல்லாம் நினைக்கின்றோம் ஆப்ரிக்காவில் இது பரவவில்லையா ஆனால் ஆப்ரிக்கா பற்றிய செய்தி இங்கு யாருக்கும் தேவையில்லை. அமெரிக்காவில் இருப்பவர்கள் உயிரிழந்தா அது முக்கிய செய்தி ஆப்ரிக்கா மக்கள் உயிரிழந்தா அது எந்த ஒரு செய்திகளிலும் குறிப்பிடப்படவில்லை. ஆப்பிரிக்காவிலேயே முக்கியமா கென்யாவில் பார்த்தால் இந்த மத போதகர்களின் வளர்ச்சி அதுவும் இந்த வைரசிற்க்கு பிறகு ஒவ்வொரு மத போதகர்களும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று நாங்கள் உங்களை இந்த வைரஸிலிருந்து காப்பாற்றுகிறோம் என்று கூறுகிறார்கள் இது எந்த ஒரு முட்டாள் தனத்தில் முடியப்போகிறது என்று தெரியவில்லை.

சில மேலே நாடுகள் நீங்கள் எங்களுக்கு தரவேண்டிய கடனை தருவதற்கு பதிலாக அந்த வைரஸூக்கு எதிரான நடவடிக்கைகளை எடுங்கள் என்று கூறுகிறார்கள். பல அரசாங்கங்கள் மக்களை வீட்டை விட்டு வரவேண்டாம் என்று தான் சொல்கிறார்கள்.எப்படி பொய்யான செய்திகள் பரப்படுகின்றதோ அவ்வாறே மதம் சம்பந்தமான மூடநம்பிக்கைகளும் செய்திகளும் பரப்பப்படுகிறது.அதற்க்கு சில உதாரணங்களை தான் நாம் பார்த்தோம்.

உலகின் பல மக்கள் மதத்தின் பெயரை கொண்டு சில விஷயங்களை நாம் இப்போது செய்தால்தான் அது சரியாக இருக்கும் அப்பொழுதுதான் நம் தெய்வம் நம்மை காத்துக்கொள்ளும் என்று நினைப்பார்கள் அப்படியெல்லாம் கிடையாதுங்க நாம் ஒரு கொடிய நோய்யூன் பிடியில் இருக்கின்றோம் அப்படி இருக்கும் போது தேவசெஞ்சி யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம் எந்த சாமியும் நம் கண்ணை குத்தாது. மனிதர்களுக்காகத்தான் கடவுள் இருக்கிறார். அதனால் நாம் எங்கே இருந்துகொண்டும் நம் தெய்வத்தை பிரார்த்திக்கலாம் வழிபாட்டுத்தளத்தில்தான் சென்று வழிபடனும் என்று கிடையாது.

சில மதத்தில் உள்ளவர்கள் இவ்வாறு செய்கின்றன நானும் என் மதம் சார்பாக இவ்வாறு செய்யப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு அனைவரும் செய்ய ஆரம்பித்துவிட்டாள் இந்த 10 வருடம் ஆனாலும் இந்த வைரஸை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

இத்தாலியில் ஏன் இந்த அளவில் வைரஸ் பரவி உயிரிழப்பு ஏற்பட்டது என்றால் அதற்க்கு முழுக்கமுழுக்க அலட்சியமே காரணம் அதேபோல்தான் இந்தியாவிலும் வைரஸ் பரவுவதற்கான காரணம் அலட்சியம் தான்
அத்தகைய அலட்சியத்திலிருந்து நாம் விடுபடவேண்டும் அது மத அலட்சியமாக இருந்தாலும் சரி, மூடநம்பிக்கை அலட்சியமாக இருந்தாலும் சரி அல்லது கோபம் நான் ஏன் இந்த அரசாங்கம் சொல்வதை கேட்கவேண்டும் என்ற கோபம் இதன் மூலமாக நாம் நம் குடும்பத்தில் உள்ளவர்களை கஷ்டப்படுத்த கூடாது.

எது நம் வாழ்க்கைக்கு நல்லது எது கெட்டது என்று யோசித்து செயல்படவேண்டும் எல்லா கோபத்தையும் மறந்து இந்த வைரசிலிருந்து நம்மையும் நம் நாட்டையும் காத்துக்கொள்ள முயற்சிப்போம்.

Related Articles

Back to top button
Close
Close