fbpx
Others

சாதி வாரி கணக்கெடுப்புக்கு பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார் ..?

பிரதமர் மோடி ஏன் சாதி வாரி எண்ணிக்கைக்கு பயப்படுகிறார்? என

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; நாட்டில் பணக்காரர் மற்றும் ஏழை என்று இரண்டு ஜாதிகள் மட்டுமே இருப்பதாக பிரதமர் அடிக்கடி கூறி வந்தார். ஆனால் இன்று பாராளுமன்றத்தில் அவர் தன்னை மிகப்பெரிய ஓபிசி என்று வர்ணித்தார்.ஒருவரைச் சிறியவர், ஒருவரைப் பெரியவர் என்று கருதும் இந்த மனநிலையை மாற்ற வேண்டியது அவசியம். ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினராக இருந்தாலும், அவர்களைக் கணக்கில் கொள்ளாமல் அவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக நீதி வழங்க முடியாது. மோடி அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசுகிறார்…அவர் ஏன் சாதி வாரி எண்ணிக்கைக்கு பயப்படுகிறார்? என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close