சபாநாயகர்—தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதம் நடத்த டிச.9-ம் தேதி முடிவு….
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கியது. எனினும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நேற்றும் இன்றும் மக்களவையில்அமளியில்ஈடுபட்டன.எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நேற்றும் இன்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.இன்று,மாநிலங்களவையும்ஒத்திவைக்கப்பட்டது.இதையடுத்து, அவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாதலைமையில்அனைத்துக்கட்சிக்கூட்டம்மற்றும்அலுவல்ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.கூட்டத்துக்குப் பிறகு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இன்று மக்களவைசபாநாயகர்தலைமையில்நடைபெற்றஅனைத்துக்கட்சிக்கூட்டத்தின்போது டிச.8-ம் தேதிதிங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்து மக்களவையில் விவாதம் நடத்தவும், டிச.9-ம் தேதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி முதல் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ்தலைமைகொறடாகே.சுரேஷ்,”அலுவல்ஆலோசனைக் குழு கூட்டத்தில் வந்தே மாதரம் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தவிவாதங்கள்குறித்து
விவாதிக்கப்பட்டது.திங்கள்கிழமைவந்தேமாதரம்குறித்த விவாதத்தைஅவைமேற்கொள்ளும்.பின்னர்,செவ்வாய்க் கிழமைமற்றும்புதன்கிழமைதேர்தல்சீர்திருத்தங்கள்குறித்து அவைவிவாதிக்கும்”என்றுதெரிவித்தார்.இரண்டுவிவாதங்களுக்கும்தலா10மணிநேரம்ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,தேவைஎனில்நேரம்நீட்டிக்கப்படும்என்றும்கே.சுரேஷ்தெரிவித்தார்.வந்தேமாதரம்குறித்தவிவாதத்தைபிரதமர்நரேந்திரமோடிதொடங்கிவைப்பார் என்று கூறப்படுகிறது.சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) என்பது இந்திய தேர்தல் ஆணையம் நடத்தக்கூடியது என்பதால் அந்தப் பொருளில் விவாதம் நடத்துவது ஏற்புடையது அல்ல என்றும், எனவே, தேர்தல் சீர்திருத்தங்கள் என்ற பரந்த தலைப்பில் விவாதம் நடத்தலாம் என்றும் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் என்பது அரசின்எல்லைக்குள் வருவதையும் அவர் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது.