சட்டசபை தேர்தலில் தி.மு.கமேலிடம் எடுத்துள்ளஅதிரடிநடவடிக்கைகள்……
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக இவர் நெல்லையில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானார். அதன்பின் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் தோல்வியுற்றாலும், அவர் பெற்ற கணிசமான வாக்குகள் தி.மு.க-வை யோசிக்க
வைத்துள்ளன. இதன் விளைவாக, திருநெல்வேலி மண்டல நிர்வாகிகள் மற்றும் தி.மு.க பலவீனமாகஉள்ளபகுதிகளின் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார்.நெல்லை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தால் கூட, அந்தப்பகுதியின்ஒட்டுமொத்தகட்சிஅமைப்பும்அதிரடியாக கலைக்கப்படும் என்று முதலமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம், கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் மிகுந்த நெருக்கடியில் பணியாற்றிவருகின்றனர்.அதன்படி வீடியோ மீட்டில் கடுமையாக எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்.. நெல்லை திமுகவின் கோட்டை இல்லை. அங்கே திமுக அதிமுகதான் மாறி மாறி வெற்றிபெறுகிறது. கடந்த முறை பாஜக வென்றுவிட்டது. இந்த நிலை மாற வேண்டும். அங்கே திமுக தொடர் வெற்றிபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை செய்யுங்கள்.. இல்லையென்றால் உங்கள் சீட் காலியாகிவிடும் என்று ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.நெல்லை தொகுதியின் வாக்கு வங்கியை ஆய்வு செய்த தி.மு.க தலைமை, அங்கு முக்குலத்தோர் சமூகத்தை விட பிள்ளைமார் சமூகத்தின் வாக்குகள்அதிகளவில்இருப்பதைகண்டறிந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் நயினார் நாகேந்திரனின் வெற்றிக்கு அந்தச் சமூக வாக்குகள் முக்கியப் பங்காற்றியதும் தெரியவந்துள்ளது.எஸ்.சி. – தேவேந்திர குல வேளாளர் (இந்து) -60,000 தேவேந்திர குல வேளாளர் – கிறிஸ்தவர் -15,000 பிள்ளைமார் -60,000 யாதவர் -45,000 தேவர் -35,000 நாடார் -20,000 இஸ்லாமியர் 20,000 முதலியார் 7,500 இதர பிரிவினர் 40,577 மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,03,077 இதில் மாரி செல்வராஜ் போன்றோரின் திமுக நட்பு காரணமாக,தேவேந்திரகுலவேளாளர்ஓட்டுக்களில்கணிசமாகதிமுகவுக்குகிடைத்துவிடுகிறது. ஆனால், தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் பிள்ளைமார் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பதால் திமுக அவர்கள் மீது கவனம் செலுத்ததிட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.அதே சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க நெல்லை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் சுப்பிரமணியனை நயினாருக்கு எதிராகக் களமிறக்க தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் பா.ஜ.க-வின் வாக்கு வங்கியைப் பிரித்து, வெற்றியைத் தன்வசமாக்க தி.மு.க திட்டமிட்டுள்ளது.தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் பா.ஜ.க-வின் செல்வாக்கை சிதைக்க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு ஒரு தனிப்பணி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் நேரடியாக கனிமொழிக்கு கொடுத்த டாஸ்க் இது என்கிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியான மூன்று வேட்பாளர்களின் பட்டியலைத் தயாரித்தல். பா.ஜ.க வேட்பாளர்களின் பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்தல். எதிர்க்கட்சிகளின் வியூகத்தை முறியடிக்கும் திறன் கொண்ட வேட்பாளரைத் தேர்வு செய்தல். நயினாருக்கு என்று சிறப்பாக திட்டங்களை வகுத்து. அவருக்கு எதிராக களத்தை மாற்றுதல். போன்ற பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பா.ஜ.கவின்கோட்டையாகக்கருதப்படும்இடங்களைக்கைப்பற்றதி.மு.கமேலிடம்எடுத்துள்ள இந்தஅதிரடிநடவடிக்கைகள், தென் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.