fbpx
Others

கோவை ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா கண்டெடுப்பு…?

கோவை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பிளாட்பாரம் 1எ இல் சுமார் 8.100 கிலோ அளவுள்ள கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. கஞ்சாவை வைத்து சென்ற நபர் குறித்த விசாரணையைரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ஜெசிஸ் உதயராஜ் கூறுகையில் இரயில் மூலம் கஞ்சா பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் வந்ததன் அடிப்படையில், இரயில் நிலையத்தை சோதனை செய்யும் போது கஞ்சா கிடைத்ததாகவும், விரைவில் குற்றவாளி யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்

Related Articles

Back to top button
Close
Close