fbpx
Others

கோவை–மாற்றுத் திறனாளி இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஜவுளிக்கடை ஊழியர் கைது….

Gandhipuramஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 32. இவர் கோவையில் தங்கி இருந்து காந்திபுரத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார். அதே ஜவுளிக்கடையில் கோவையைச் சேர்ந்த 20 வயதான மாற்றுத் திறனாளிப் பெண்ணும் அவருடைய தாயாரும் வேலை செய்து வருகிறார்கள்.இந்நிலையில் அந்த இளம் பெண்ணுக்கு நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் அவர் தாயாருக்கு மத்திய உணவு கொண்டு வந்து கொடுத்து விட்டு வீட்டிற்குச் சென்றார்.அப்பொழுது மகேஷ் அந்த இளம் பெண் வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர் அவரிடம் பக்கத்தில் ஒரு வேலை விஷயமாக வந்ததாகவும், கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடு என்று கேட்டு உள்ளார். உடனே அந்த இளம் பெண் தண்ணீர் எடுக்கச் சென்ற போது மகேஷ் வீட்டுக்குள் சென்று இளம் பெண்ணை கட்டிப் பிடித்து உள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த அவர் ஏன் ? இப்படி செய்கிறீர்கள் என்று கூறியபடி தப்பிக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை, பின்னர்அவரைவலுக்கட்டாயமாகதூக்கிச்சென்றுமகேஷ்பலாத்காரம் செய்தார்.பிறகு இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக கூறி விட்டு அங்கு இருந்து தப்பி சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட இளம் பெண் இதுகுறித்து அவரதுதாயாரிடம் கூறி அழுதார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர். இதுகுறித்து காட்டூரில் உள்ள கோவை மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில்காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் தலைமறைவாக இருந்த மகேஷ் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close