கோவை.,–மாசாஜ் சென்டரில் விபச்சாரம் ! உரிமையாளர் உட்பட 7 பேர் கைது..?

கோவை-காந்திபுரம், ராம்நகர் பகுதியில் செல்வகுமார் என்பவர் SPS Grand – ஹோட்டலுக்குள் ஈடன் ஸ்பா நடத்திவருகிறார். இவரது ஸ்பாவில் வடமாநில பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக புகார் வந்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற காட்டூர் காவல் ஆய்வாளர் டவுளத் சம்பந்தபட்ட ஹோட்டலை ஆய்வு செய்த போது அங்கு 20-23 வயதுடைய நாகலந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலத்தை சேர்ந்த பல பெண்கள் விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இது குறித்து அங்குள்ள நபர் ஒருவர் தெரிவித்ததாவது ! இந்த ஹோட்டலில் பல நாட்களாக விபச்சாரம் நடப்பதாகவும் இது குறித்து காவல் துறைக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. நேற்றைய தினம் கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் செய்ய துணை போகும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.