fbpx
Others

கோவை–தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும் படை குழுக்கள்வாகன சோதனை…

 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும் படை (Flying Squad) குழுக்கள் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.முக்கிய சாலைகள், நகர நுழைவுப் பகுதிகள் மற்றும் சோலையார் டேம் கேரளா எல்லை மற்றும் பழைய வால்பாறை மக்கள் நெரிசல் அதிகம் காணப்படும் இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, இரவு பகலாக வாகனங்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன. குறிப்பாக, அனுமதியின்றி அதிக அளவில் பணம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் அல்லது வாக்காளர்களை கவரும் வகையிலான பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இச்சோதனைகளின் போது வாகன ஓட்டிகளிடம் தேவையான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதுடன், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் ஒழுங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.மேலும், பொதுமக்கள் தேர்தல் விதிமுறைகளை மதித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உடனடியாக தகவல் அளிக்க வேண்டுமெனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். வால்பாறை முழுவதும்ஔ பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.. கோவைமாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்ரகாஷ் தே

 

Related Articles

Back to top button
Close
Close