fbpx
Others

கோவை–சிலம்ப பள்ளி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு — சிறப்பு செய்தி.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சாக்யா அகாதமி சார்பில் சிலம்ப பள்ளி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு :

கோவை, பிப்., 15:கோவை, வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும், வருண் தற்காப்பு கலைகூட பள்ளியில் சிலம்பத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகள் 30 பேருக்கு சிலம்பம் தெடர்பாக வாய்மொழித்தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடைபெற்றது. இதில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த சாக்யா அகாதமியின் இயக்குநர் முனைவர் சே.செந்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சாக்யா அகாதமி மதுரையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நம்முடைய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தினுடைய இணைவு பெற்ற ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையம் மதுரை மட்டுமல்லாது மதுரையை சுற்றி பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து சிலம்பாட்டத்தில் இருந்து முறையாக வந்து கல்வியின் வாயிலாக இந்த கலையை கற்க வேண்டும். அப்படிபட்ட நோக்கத்தோட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய பருவநிலை தேர்வுக்காக இன்றைக்கு மாணவர்கள் எல்லாம் கூடி இருக்கிறார்கள். இந்த சிலம்பாட்டமானது 8 படிநிலை கொண்டது படிநிலை ஒன்றிலிருந்து படிநிலை 8 வரைக்கும் ஆனது சிலம்பாட்டத்தில் முறையாக பிராக்டிக்களோட வந்து கற்க வேண்டும். இதில் வாய்மொழி தேர்வுக்கு 100 மதிப்பண்களும், செய்முறை தேர்வுக்கு 100 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் மூலம் மாணவர்கள் அரசு வேலைவாய்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 

Related Articles

Back to top button
Close
Close