fbpx
Others

கோவை கிழக்கு மாவட்ட அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் ரோகினிக்கு எதிராகபோர்க்கொடி..

கோவை கிழக்கு மாவட்ட அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் ரோகினிக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க்கொடி :**கட்சியின் பெயரில் வசூல் வேட்டை, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக தொண்டர்கள் புகார் ….கோவை கிழக்கு மாவட்ட அ.ம.மு.க அமைப்பு செயலாளர் மா.ப. ரோகினிகிருஷ்ணகுமார். இவர் ஜெயலலிதா இருந்த காலத்தில், 2001 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் படி கோவை பேரூர் தொகுதியில் போட்டியிட்டு 94607 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு இவரின் சர்ச்சை செயல்களால், இவருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகாவில் ஏற்பட்ட உட்கட்சி விவகாரத்தால் டிடிவி தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் , சசிகலா என அணிகள் பிரிந்தன. இதையடுத்து Ex எம்எல்ஏ ரோகினிகிருஷ்ணகுமார் டிடிவி தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டு, அ.ம.மு.க வில் தன்னை ஐக்கிய படுத்திக் கொண்டார். இதையடுத்து அவருக்கு, அ.ம.மு.க கோவை கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.*அழிவு பாதையில் செல்லும் அமமுக கிணத்துக்கடவு தொகுதி :*  Ex எம்எல்ஏ ரோகினி, சமீபகாலமாக இவரது மகன் ஜெய் சிம்மனை கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி அவரது மகன் ஜெய் சிம்மனுக்கு அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அமமுகாவில் உள்ள முத்தமுன்னோடிகள் புறக்கணிக்கப்பட்டு நேற்று வந்தவர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டது, என்று பேசப்பட்டது, இவர் கட்சியில் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல், தானாகவே எல்லா முடிவுகளை எடுக்கும் அளவுக்கு இவர் தலைமை செல்வாக்கை தவறாக பயன்படுத்தி வருகிறார். இது அக்கட்சியில் உள்ள நிர்வாகிகளை எரிச்சலடைய செய்தது. இதுமட்டுமல்லாது, அமமுக பெயரை பயன்படுத்தி கந்துவட்டி, பைனாஸ் உள்ளிட்ட பல்வேறு அடாவடி வசூலில் ஈடுபட்டதாக கடந்த வாரம் பெண்கள் பலர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் இரவு 11 மணிக்கு மேல், கோவை கிழக்கு மாவட்ட அ.ம.மு.க அமைப்பு செயலாளர் ரோகினிகிருஷ்ணகுமார் Ex எம்எல்ஏ பையன் ஜெய் சிம்மன் என்றும், நீங்கள் இப்போ பணம் கட்டவில்லை என்றால் உன்ன சும்மா விடமாட்டேன், என்று கூறி மிரட்டியுள்ளனர். இந்த விஷயத்தில் Ex எம்எல்ஏ ரோகினியின் மகன் ஜெய் சிம்மன், காவல் ஆணையரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.  *த.வெ.க வுக்கு தாவுகிறார் Ex எம்எல்ஏ ரோகினி ?தற்போது Ex எம்எல்ஏ ரோகினியின் தொல்லை தாங்காமல் அவருடைய ஆதரவாளர்கள் பலர் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று விட்டனர் என்றும், இந்த நிலை தொடர்ந்தால் மேலும் கட்சி தொண்டர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இழக்க நேரிடும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்என்றுஅவரின்அரசியல்வட்டாரங்கள்கருத்துதெரிவிக்கின்றனர்  கீதாஞ்சலி வெளியேற  Ex எம்எல்ஏ ரோகினி தான் காரணம் !  இது தொடர்பாக வந்த தகவல் படி, கோவை கிழக்கு மாவட்டம், கிணத்துகடவு தொகுதியில் கட்சிப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தது, தற்போது Ex எம்எல்ஏ ரோகினி, கட்சி பணிகளை சிறப்பாக செய்து வந்த கிணத்துக்கடவு தொகுதி பொறுப்பாளர் இரா. ஆறுமுகத்தை புறம்தள்ளி விட்டு, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். பின்னர் மாற்றுக்கட்சியில் பணத்தை பெற்றுக்கொண்டு, நெஞ்சுவலி என்று நாடகம் ஆடினார். பின்னர் கட்சியில் இருந்து வந்த பணத்தை பதுக்கி விட்டு, கட்சியிலிருந்து பணமே வரவில்லை என்று கூறிவிட்டார்.Amma Makkal Munnettra Kazagam - அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாணவர் அணிக்கென தனி உறுப்பினர் படிவத்தை கழக துணை பொது செயலாளர் திரு.TTV தினகரன் ... கடைசியில் தேர்தலில் தோல்வியடைந்து டெப்பாசிட் இழந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சிப் பணத்தை அபகரித்து கொண்டு மகனுக்கு சொகுசு கார் வாங்கி கொடுத்துள்ளார் கழக அமைப்பு செயலாளர், Ex எம்எல்ஏ ரோகினி. இவர் தற்போது கட்சியில் உள்ள உறுப்பினர்களை தள்ளிவிட்டு குடும்ப அரசியலை முன்னிறுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.*கட்சியை விட்டு வெளியேறினார் கீதாஞ்சலி !*   அமமுக மாவட்ட கழக துணைச் செயலாளர் கீதாஞ்சலி கட்சி தலைமைக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, கட்சியின் வளர்ச்சி பணிகளை செய்ய, மென்மேலும் வளர்க்க கட்சிப் பதவியில் இருந்து தான் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை, மக்கள் பணியாற்ற கட்சியின் உறுப்பினராக இருந்தாலே எனக்கு போதுமானது, மேலும் என்னுடைய கட்சி பதவியை விட, கட்சியின் வளர்ச்சியே எனக்கு முக்கியம்என்னும்உயரியசிந்தனையுடன், நான் இன்று முதல் கட்சிப் பதவியிலிருந்து விலகி கொள்கிறேன். என்னென்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உண்மை விசுவாசி என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த பிரச்சனையை உடனடியாக டிடிவி தினகரன் கையில் எடுத்து Ex எம்எல்ஏ ரோகினியை கட்சியிலிருந்து நீக்கி, கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது….

Related Articles

Back to top button
Close
Close