fbpx
Others

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்…

Govt Arts collegeகோவை விமான நிலையத்தின் பின்புற பகுதியில் நேற்று இரவு தனியார் கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தன் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவியை பார்த்த அந்த கும்பல், ஆண் நண்பரை ஆயுதங்களால் தாக்கி, மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பிவிட்டனர்.இதுதொடர்பாக மாணவியின் ஆண் நண்பன் வினீத் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். மாணவி இன்று அதிகாலை 4 மணியளவில் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து, 7 தனிப்படைகள் அமைத்து அந்த 3 நபர்களை தேடி வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் ஏற்கனவே பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன. கோவையின் முக்கிய பகுதிக்கு மிக அருகில் இருந்தாலும் அது சாதாரண மண் பாதை. அந்த வழியாகத்தான் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி, நீலிக்கோணம்பாளையம், இருகூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வார்கள். மேலும் மேற்சொன்ன பகுதிகளில் இருந்து, விமானம் நிலையம், அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வருபவர்களும் அந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.காலியான இடம்A 19 Year Old College Girl Was Abducted And Gang Raped By 3 Men Near Coimbatore Airport | கோவையில் அதிர்ச்சி.. கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை! Tamil-nadu News in Tamil என்பதால் அங்கு போதைஆசாமிகள்மதுகுடிப்பதற்காக பயன்படுத்துவார்கள். அருகிலேயே ஏராளமான கல்லூரிகள் இருப்பதால் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கும்அந்தப்பகுதியைஅதிகம்பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக பகல் நேரங்களில் மட்டுமேஅந்தசாலையில்அதிகமானோர்செல்கின்றனர். இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கு ஒருகொலை, கொள்ளை வழக்கு நடந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரை ஒரு போதை கும்பல் மதுகுடிக்க பணம் கேட்டு கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதேபோல தொடர் வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அந்தப் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதே பகுதியில் ஒரு சட்ட விரோத பாரும் இயங்கி வந்தது.  மாணவி பாலியல் வழக்குக்கு பிறகு அந்த பாரை நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் அந்தப் பகுதி மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். பூங்கா நகர், எஸ்.ஐ.ஹெச்.ஐ காலனி சாலை, பிருந்தாவன் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close