Others
கோவை–கர்பிணி பெண்களுக்கு சத்துமாவு வழங்கும் நிகழ்ச்சி !

கோவை மாவட்டம் ஶ்ரீ சத்ய சாயி சேவா சமிதி ஶ்ரீராம் நகர் சார்பாக செட்டிபாளையம் பிரதான சாலை, ஈச்சனாரி சாலையில் உள்ள பழங்குடி இனத்தைச்சார்ந்த 50 குடும்பங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சாய் சத்துமாவு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இது குறித்து சத்ய சாயி சமிதி பொறுப்பாளர் ராஜேஷ் கூறுகையில் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை சத்துமாவும், அன்னதானமும் வழங்கப்பட்டுவருவதாகவும், வரும் காலங்களில் அவர்களின் தேவைகளை கண்டறிந்து உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்தார். இதில் உறுப்பினர்கள் கமல், பூபதி, சுரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.