fbpx
RETamil News

வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக் – நாடு முழுவதும் வங்கி சேவை முடங்கியது.

ஊதிய உயர்வு , வங்கிகள் இணைப்பை கைவிடுதல் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் கடந்த 21-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்சொன்ன கோரிக்கைகளை முன்வைத்து வாங்கி ஊழியர்கள் இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் பொதுமக்களும் பணப்பரிமாற்றம் செய்யமுடியாமல் பெறும் அவதிப்பட்டனர். மேலும் மாதத்தின் நான்காவது சனிக்கிழமை , கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வந்ததால் வங்கி பணிகள் கடுமையாக பாதிப்பிற்குள்ளானது.

இதையடுத்து பேங்க் ஆஃ ப் பரோடா , தேனா வாங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.எதனை கண்டிக்கும் வகையில் ஒன்பது வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான வங்கி தொழில்சங்கங்களின் ஐக்கிய அமைப்பினர் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு நடத்தப்படும் இந்த போராட்டத்தில் 10 லட்சம் வங்கி அதிகாரிகள் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர் விடுமுறைக்கு அடுத்து இன்று வங்கி சேவை தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்றும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்வதால் வங்கி சேவை கடுமையாக பாதிப்படையும் , அதனால் பணப்பரிமாற்றம் செய்ய முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close