fbpx
Others

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவல்…..?

Sabari peedam- Sabarimala yathara #ayyappan #sabarimalaayyappa - YouTubeகேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவி வருவதால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர் நிலைகளில் குளிக்கும் போது மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அந்த மாநில சுகாதாரத் துறை அறிவுரைவழங்கியுள்ளது.கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சபரிமலை கோயில் உள்ளது. தென்னிந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை போல் பிரபல கோயில்களில் சபரிமலையும் ஒன்றாகும்.இந்த கோயிலுக்கு மகரவிளக்கு, மண்டல பூஜை, உள்ளிட்ட காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அந்த வகையில் கார்த்திகை மாதம் நாளை பிறக்கும் நிலையில் மண்டல பூஜை நாளை தொடங்குகிறது. இதற்காக இன்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும். மண்டல பூஜை காலத்தில் 41 நாட்கள் கோயில் திறந்திருக்கும். கார்த்திகை மாதம்என்பதால்தினமும்ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன் பின்னர் மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும். அப்போது 21 நாட்கள் வரை கோயில் நடை திறந்திருக்கும். முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம், ஜனவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் கேரளாவில் சில இடங்களில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனும் நோய் பரவி வருகிறது.அதாவது மூளையை தின்னும் அமீபா என அழைக்கப்படுகிறது. அதனால் கேரளா சுகாதாரத் துறை சபரிமலைக்கு வரும்ஐயப்பபக்தர்களுக்கானசிலவழிகாட்டுதல்களைவெளியிட்டுள்ளது.அதில் சபரிமலைக்கு வரும் வழியில் ஆறுகளில் குளிக்கும் போது மூக்குக்குள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருத்தல் வேண்டும். ஏற்கெனவே உள்ள உடல்நல பிரச்சினைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்வோர் அவற்றைதொடர்ந்துசாப்பிடவேண்டும்..மருத்துவசிகிச்சையில் இருப்பவர்கள், அதற்கான ஆவணங்கள், மருந்துகளுடன் பயணிப்பது அவசியம். சபரிமலை யாத்திரை புறப்படும்முன்னர்,நடைபயிற்சிபோன்றஎளிதானஉடற்பயிற்சிகளைமேற்கொள்ளுங்கள்.  மலை ஏறும் போது மெதுவாக ஏறவும். அது போல் இடைவெளி விட்டு செல்லுங்கள். ஒருவர் பின்னால் ஒருவர் நெருக்கமாக செல்வதை தவிருங்கள். வெந்நீரையே குடியுங்கள். உணவு மட்டுமல்லாமல் எந்த தின்பண்டங்களை சாப்பிடுவதாக இருந்தாலும் அதற்கு முன்னர், கைகளை கழுவ வேண்டும். அது போல் குளிப்பதற்கு பயன்படுத்தும் துணியை நன்றாக உதறிய பிறகு தலைமற்றும்முகத்தைதுடைக்கவேண்டும்.திறந்தவெளியில் மலம் கழிக்க தடை உள்ளதால் பக்தர்கள் சுகாதாரமான கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்Brain eating Ameoba .சபரிமலை,பம்பை,நிலக்கல்உள்ளிட்டபகுதிகளில்செயல்படும்மருத்துவமனைகளில் பாம்புக் கடிக்கான விஷ முறிவு மருந்துகள் உள்ளனர். திருவிதாங்கூர் தேவஸ்தானத்துடன் இணைந்து விரிவான மருத்துவ வசதிகள் சபரிமலையில் செய்யப்பட்டுள்ளன. மலை ஏறும் போது சோர்வான நிலை, நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். பக்தர்களின் அவசர மருத்துவ உதவிக்கு 04735 203232 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.இது தவிர ஐயப்ப பக்தர்களுக்கு உயர் மருத்துவ வசதிகளை அளிக்க கோன்னி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எல்லா வசதிகளும் உள்ளன. பத்தினம்திட்டா மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்படும். நிலக்கல், பம்பையில் மருத்துவ ஆய்வு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சைமையம்செயல்படும்.பந்தளம்,அடூர்,பத்தனம்திட்டா, வடசேரிக்கராஆகியஇடங்களில்சிறப்புமருந்தகங்கள்செயல்படும்எனஅறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே இந்த அறிவுறுத்தல்களை யாரும் அலட்சியப்படுத்தாமல் நல்லபடியாக ஐயப்பனை காண வந்து பத்திரமாகவும் நலமாகவும் வீடு திரும்ப வேண்டும் என்பதே மாநில அரசு, தேவஸ்வம் போர்டின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close