கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தேமுதிக குழப்பம்….?
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுடன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஏற்கனவே ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இருப்பினும் திமுகவின் முக்கிய கூட்டணியான விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.தேமுதிகவை பொறுத்தவரை ஒரு ராஜ்ய சபா சீட் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. அதேபோல் கூட்டணிக்கு வருவதற்கு முன்பாகவே தொகுதி எண்ணிக்கை தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்அண்ணாஅறிவாலயம்வந்துமுதல்வர்ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை இறுதி செய்தார். ஆனால் திமுக மேலிடம் நினைத்ததை போல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் செல்லவில்லை. கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்துள்ளன. சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தேமுதிகவிடம் மீண்டும் அமைச்சர் எ.வ.வேலு மூலமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முதலில் தேமுதிகவுக்கு 9 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்க திமுக முன் வந்திருந்தது. ஆனால் கூட்டணி கட்சிகளின் பிடிவாதம் காரணமாகவே தேமுதிகவுடன் திமுக மீண்டும் பேசி வருகிறது. இதன் காரணமாக தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட போது, அங்கு பிரேமலதா விஜயகாந்த் வரவில்லை என்று சொல்லப்படுகிறதுஅதேபோல் ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் போது வந்த பிரேமலதா விஜயகாந்த் பெரியளவில் மகிழ்ச்சியாக இல்லை. இதற்கு பின்னணியில் திமுகவின் இந்த தொகுதி குறைப்பு பேச்சுவார்த்தை தான் என்று சொல்லப்படுகிறது. இதனால் தேர்தல் அறிவிப்புக்கு முன் இந்த பிரச்சனைகளை திமுக சரி செய்யுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.