குன்றத்தூர்– தலைமை நிலைய செயலகம் திறப்பு விழா…

சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின்..தலைமை நிலைய செயலகம் திறப்பு விழா
சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் தலைமை நிலைய செயலகம் திறப்பு விழா, 19.01.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, குன்றத்தூர் மெயின் ரோடு, சிக்கராயபுரம் (பாரத் பெட்ரோல் பங்க் அருகில்) பகுதியில் நடைபெற்றது.தலைமை நிலைய செயலகத்தை டாக்டர் சி.சாமுவேல் தேவ பிரசாத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.சரவணன், அகில இந்திய ஆலோசனை குழு தலைவர் டாக்டர் ஜே.கே.ஆர் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.கோபி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.மகேஸ்வரன், ஆர்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநிலத் துணைப்பொதுச்செயலாளர்எஸ்.பாண்டியன்,மாநிலதலைமைஒருங்கிணைப்பாளர்எஸ்.மகேஸ்வரன்துணை ஒருங்கிணைப்பாளர் வி.சண்முகம், மாநில செயலாளர் – மகளிர் நலப் பிரிவு வி.பல்கீஸ் பானு ஆகியோர் வரவேற்பு உரையாற்றினர்.ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) எம்.கருணாநிதி, ஓய்வு பெற்ற டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் டாக்டர் எம்.ஜெ.ரோச், சென்னை உயர்நீதிமன்ற ஸ்டேட் ஸ்டேன்டிங் கவுன்சில் உறுப்பினர் எம்.இளங்கோவன், இந்திய அரசின் அடிஷனல் ஸ்டேன்டிங் கவுன்சில் உறுப்பினர் ஏ.சச்சின்ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மாநிலச் செயலாளர்கள் மாநில இணை மற்றும் துணைச் செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட இணை மற்றும் துணைச் செயலாளர்கள் சட்ட ஆலோசர்கள் ஒன்றிய செயலாளர் நகரச் செயலாளர்கள் பேரூராட்சி செயலாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் சிறப்பு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.