காரைக்குடியில் சீமான் போட்டி….
திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் சீமான் பேசி வருகிறார். வரும் சட்டசபை தேர்தலில்234தொகுதிகளுக்கானவேட்பாளர்களைஅறிமுகப்படுத்தினார்.அதில் 117 ஆண்கள், 117 பெண்கள் உள்ளனர். தேர்தல்நெருங்கநெருங்ககடந்தஆண்டுமுதலேசிலதொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்று அவரது கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார். அந்த வகையில் காரைக்குடியில் சீமான் போட்டியிடுகிறார். இதுவரை அவர் எத்தனை முறை போட்டியிட்டுள்ளார் என்பதை பார்க்கலாம். கடந்த 2016ஆம் ஆண்டு கடலூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 12,497 வாக்குகளை பெற்றிருந்தார். அவர் பெற்ற வாக்கு சதவீதம் 7.24 ஆகும். அது போல் திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் போட்டியிட்டு 48,597 வாக்குகளை பெற்றார். அவரது வாக்கு சதவீதம் 24.43 சதவீதம் ஆகும். அதாவது 2ஆம் இடம் பெற்ற அதிமுக வேட்பாளர் கே.குப்பன் பெற்ற வாக்குகள் 50,524 ஆகும்.தற்போது மூன்றாவது முறையாக காரைக்குடி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி 2010 மே 18-ஆம் தேதி மதுரையில் சீமானால் தொடங்கப்பட்டது. இது ஆதித்தனார் நடத்திய பழைய “நாம் தமிழர் இயக்கம்” (1958-ல்தொடங்கப்பட்டது)என்பதன்தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. கட்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படுகிறது. 2016 சட்டமன்றத் தேர்தல் (தமிழ்நாடு – 234 தொகுதிகள்): வாக்கு சதவீதம் – 1.07% முதல் 1.1% (சுமார் 4.58 லட்சம் வாக்குகள்). ஒரு இடத்திலும் வெற்றி இல்லை. 2019 மக்களவைத் தேர்தல் (தமிழ்நாடு + புதுச்சேரி): வாக்கு சதவீதம் – 3.9% (சுமார் 16.45 லட்சம் வாக்குகள்). தனித்து போட்டியிட்டது; வெற்றி இல்லை.2021 சட்டமன்றத் தேர்தல் (தமிழ்நாடு – 234 தொகுதிகள்): வாக்கு சதவீதம் – 6.58% (சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள்). திமுக, அதிமுக-க்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 170+ தொகுதிகளில் மூன்றாம் இடம்; வெற்றி இல்லை. 2024 மக்களவைத் தேர்தல் (தமிழ்நாடு + புதுச்சேரி – 40 தொகுதிகள்): வாக்கு சதவீதம் – 8.19% முதல் 8.22% (சுமார் 35.60 லட்சம் வாக்குகள்). 12 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள்; சில இடங்களில் மூன்றாம்/நான்காம் இடம். வெற்றி இல்லை, ஆனால் தேர்தல் ஆணைய அங்கீகாரம் (மாநிலக் கட்சி அந்தஸ்து) பெற்றது. கட்சி தொடர்ந்து வாக்கு வங்கியை வளர்த்து வருகிறது. 2016-ல் 1% முதல் 2024-ல் 8%+ வரை உயர்ந்துள்ளது. ஆனால் இதுவரை எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. கடந்த தேர்தல்களில் முட்டி மோதி 2ஆவது இடம் , 3ஆவது இடங்களை நாம் தமிழர் பெற்றுள்ள நிலையில் கூட்டணி ஏதும் அமைக்காமல் தனது கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.