Others
காஞ்சிபுரம்-தமிழ்நாடு சிலம்பம் பேரவை நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனை கூட்டம்..


தமிழ்நாடு சிலம்பம் பேரவை நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனை கூட்டம் கௌரவ தலைவர். கலை முதுமணி.ஆர். முருகக்கனி ஆசான் தலைமையில் நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஏ. பி. ஜே .அப்துல் கலாம் நூலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர்.ஜே. ஈசன், பொதுச் செயலாளர்.நாஞ்சில் மு.சுரேஷ், மாநில துணைத்தலைவர்.
என் .ஜி .ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு சிலம்பம் பேரவை வளர்ச்சி குறித்தும் மாநில போட்டி நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.மாநிலப் போட்டிக்கு பல்வேறு சிலம்ப அமைப்புகளை சேர்ந்த வீரர்களைஅழைப்பதுஎன்றும்தீர்மானிக்கப்பட்டது.விரைவில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து சிலம்பத்திற்கு தனி வளர்ச்சி வாரியம் அமைக்க கோரி மனு அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது..