fbpx
Others

காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை தி.மு.க தரும்….

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்? - பரபரப்பு தகவல் | Why is  there a tug-of-war over DMK-Congress seat sharing? - Sensational newsதி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளைதி.மு.க.விடம் கேட்டு பெறலாம் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைதலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.தற்போது காங்கிரஸ்வசம்இருக்கும்காரைக்குடி,சிவகாசி,அறந்தாங்கி,ஸ்ரீபெரும்புதூர்(தனி),வேளச்சேரி,குளச்சல்,விளவங்கோடு  கிள்ளியூர், ஊட்டி, நாங்குநேரி, மயிலாடுதுறை, பொன்னேரி, சோழிங்கர், ஸ்ரீவைகுண் டம், தென்காசி,திருவாடானை, விருதாச்சலம் ஆகிய 17 தொகுதிகளை கேட்டு பெறுவது என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகவும், இவை தவிர கூடுதலாக11 இடங்கள் எவை என்பதும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.காங்கிரஸ் வசம் இருக்கும் 17 தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்டவர்களில் பலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது எனகூறப்படுகிறது. காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் இறுதி செய்யப்பட் டுள்ள நிலையில் அதனைகட்சி தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றதும், தி.மு.க.விடம் வழங்க தமிழக காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.காங்கிரஸ் தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள்தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.வி. தங்கபாலுஉள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்கூட்டத்தில் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கட்சி தலைமையின் மூலம் மட்டுமே வெளியிடப்படும்” என்றுதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைதெரிவித்தார்.

 

 

.

 

 

 

 

 

.

 

 

 

Related Articles

Back to top button
Close
Close