களரிக்காக தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி–சிறப்புசெய்தி.

அமெரிக்காவில் வட கேரோலினா என்ற மாகாணத்தின் ராலே தலைநகரத்தில் களரிக்காக தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி முதன்முறையாக நடந்தது.
அமெரிக்காவில் உள்ள 10 மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். களரிக்கான போட்டியில் அடிமுறை, சிலம்பம், வேல்கம்பு, களரி பயிற்று வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். அமெரிக்கா தேசிய சாம்பியன்ஷிப்பை அமெரிக்கா மோரிஸ்வில் நகர மேயர் டி.ஜே. காவ்லி குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சிக்கு உலக களரி கூட்டமைப்புக்கு பதிவு செய்த அமெரிக்க களரி கூட்டமைப்பு தலைவர். ரமேஷ் ரத்தினகுமார் தலைமை வகித்தார்.அமெரிக்க களரி கூட்டமைப்பு தலைமை செயலாளர். பாரத் ராமமூர்த்தி தேசிய சாம்பியன் ஷிப்பிற்கான விளையாட்டு முறைகளை வடிவமைத்ததுடன் அமெரிக்கா தேசிய சாம்பியன்ஷிப் போட்டி இயக்குனராகவும் பொறுப்பேற்று நடத்தி கொடுத்தார்.உலக களரி கூட்டமைப்பின் சார்பாகவும், அமெரிக்க களரி கூட்டமைப்பு சார்பாகவும் பொருளாதார ரீதியாக பொருளாளர் லதா ஜெயராமன் ஏற்பாடு செய்திருந்தார்.அமெரிக்காவில் களரி அடிமுறையை வெற்றிகரமாக நடத்துவதற்கு நகரில் உள்ள தொழிலதிபர்கள் பத்துக்கு மேற்பட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அமெரிக்காவில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டாக களரியை மாற்றி கொடுப்பதற்காக டாக்டர் முனியசாமி விளையாட்டுக்கான விதிமுறைகளை வடிவமைத்தார். சுரேஷ்மணி ஆசான், சுரேந்திரன் ஆசான் ஆகியோர் உதவி புரிந்தனர். இந்த விளையாட்டுகள் அமெரிக்கா மாணவர்கள் இடையே பெரும் வரவேற்பாக இருந்தது. களரி கலையை அமெரிக்கா முழுவதும் பரவுவதற்கு இந்த சாம்பியன் ஷிப் போட்டி மிகவும் உதவியாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை உலக களரி அடிமுறை முதன்மை அலுவலர் டாக்டர் செந்தில்ராஜ்குமார் செய்திருந்தார். தொடர்ந்து களரி கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.