fbpx
Others

கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல்.,அசம்பாவிதம்.வேதனை, துயரம் ….?

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி | Chief Minister M.K. Stalin admitted to Apollo hospitalகரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.“8 குழந்தைகள், 16 பெண்கள் உள்பட 36 பேர் உயிரிழந்த தகவல் அறிந்து துயரமும் வேதனையும் அடைந்தேன் எனவும் கரூர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்” எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.இன்று இரவே தனி விமானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கரூர்விரைகிறார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். “விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அரசுமருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரியசிகிச்சைஅளிக்கப்படுகிறது.தனியார்மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டோருக்கும் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படுகிறது. 31 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர்சிகிச்சையில் உள்ளனர்” என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும்,மேலும்பலர்படுகாயமடைந்து உயிருக்குஆபத்தானநிலையில்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கானஏற்பாடுகளைசெய்வதிலும்,கூட்டத்தைகாவல்துறையினர்  ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான்இதற்குகாரணமாகும். கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தனைவருக்கும்தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்; காயமடைந்த அனைவரும் விரைந்து உடல் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இதுவரை விஜய் பிரச்சாரத்தில் எந்தவொரு பெரிய அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், இன்று கரூரில் நிலைமை வேறு மாதிரி போய்விட்டது. விஜய் பிரச்சாரத்தில் பேசிக் கொண்டு விஜய்யின் கரூர் பிரசாரத்தில் நெரிசல்இருந்தபோதே அங்குத் தள்ளுமுள்ளு ஏற்படத் தொடங்கியது. வரிசையாகப் பலரும் மயங்கி விழுந்தனர். ஆனால், இது தெரியாமல் விஜய் பேசிக் கொண்டு இருந்தார். ஒருவர் மீது ஒருவர் முண்டியடித்த நிலையில், அசம்பாவிதம் நடந்துள்ளது. இதுவரை 35+க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் பலரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் பலரும் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அண்டை மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் கரூருக்கு விரைந்துள்ளனர்.மற்றொருபுறம் விஜய் கரூரில் இருந்து கிளம்பிவிட்டார். கரூரில் இருந்து திருச்சி வந்த அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பிவிட்டார். திருச்சி விமான நிலையத்திலேயே செய்தியாளர்கள் விஜய்யிடம் கரூர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்குப் பதில்சொல்லாமல்கிளம்பிவிட்டார்.சென்னையிலும்விஜய்செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.இதற்கிடையே இந்தத் துயரம் தொடர்பாக விஜய்யிடம் நேரடியாகவே போலீசார் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close