கன மழையின் காரணமாக பொன்னை ஆற்றில்♦️வெள்ள அறிவிப்பு ♦️…

பொன்னை அணைகட்டு நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பொன்னை ஆற்றில் இன்று (10.10.2025) காலை 4.00 மணி நிலவர படி ஆற்றில் 6480 கன அடி நீர் வர பெருகிறது தற்பொழுது பெய்து வரும் மிக கன மழை ஆனது தொடர்ந்தால் இந்த அளவானது மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் பொன்னை ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் வெள்ள நீர் செல்லும் பொன்னை ஆற்றில் கரை ஓரம் உள்ள வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மாதாண்டகுப்பம், பொன்னை, கீரைசாத்து, வெப்பாலை, குகையநல்லூர், திருவலம், வசூர் கொண்டாக்குப்பம், ஏகம்பரநல்லூர், நெல்லிக்குப்பம் மோட்டூர், இலாலா ப்பேட்டை, முகுந்தராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றினை கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆற்றிற்கு செல்லாமல் பாதுகாத்துக்கொள்ளவும், மேலும், வீட்டில் உள்ள சிறுவர் / சிறுமிகளையும் ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களை அறிவுறுத்திட மாவட்ட நிர்வாகம், வருவாய் அலுவலர் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை அவர்களை இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.