கனிமவளக் கொள்ளைக்கு துணை போன மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி..?
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மாற்றப்பட கனிமவளக் கொள்ளைக்கு துணை போனது தான் காரணம் !

கோவையில் கனிமவளக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த விஏஓ மற்றும் ஆர்.ஐ. தாசில்தார்களை அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கனிம வள கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் கணக்கு காட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைகளில், அரசு புறம்போக்கு, மற்றும் குத்தகை நிலங்கள் மற்றும் ஓடைகளில் இருந்து ஏராளமான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.மாவட்ட நிர்வாகம் இதை தடுக்காமல் மெத்தனமாகச் செயல்படுவதாகக் ஐகோர்ட் கடுமையாக கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் கனிம வளக்கடத்தலை மீண்டும் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து,எப்ஐஆர்பதிவுசெய்து,கைதுநடவடிக்கைஎடுக்கமுழுஅதிகாரம்வழங்கியது.இந்தவிசாரணையில்அரசுஅதிகாரிகள்மற்றும்காவல்துறையினரின்உடந்தையாகஇருந்துள்ளதுமுதற்கட்டவிசாரணைதெரியவந்துள்ளது. இந்நிலையில்கோவைவடக்குமற்றும்பேரூர்தாலுகாக்களில்பணிபுரிந்தவி.ஏ.ஓ,தாசில்தார்,வருவாய்ஆய்வாளர்கள்அருகில்உள்ளகிராமங்களுக்குஇடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர் மேலும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உத்தரவை கிடப்பில் போட்டது. போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தான்கலெக்டர்கிராந்திகுமார்சென்னைக்குமாற்றப்பட்டதன்காரணம்தெரியவந்தது.கனிமவளக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களை ‘சஸ்பெண்ட்’ செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.