fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம்.!- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு!

சென்னை;

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று மட்டும் முழு ஊரடங்கு காரணமாக பெட்ரோல் பங்க், மளிகை, காய்கறி உள்பட அனைத்து கடைகளும் மூடப்படுகிறது.

பால், மருந்து,மற்றும் செய்தித்தாள்  விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

காரணமில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனக்கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

மீறி வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மக்கள் நடமாடுவதை  தடுக்க வாகன ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ட்ரோன் காமிரா மூலம் அனைத்து தெருக்களும் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

ஊரடங்கை முறைப்படுத்த சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்துள்ளார்.

 

Related Articles

Back to top button
Close
Close