fbpx
RETamil News

முதலையை அடித்து விரட்டிய சிறுவன் வீரதீர விருதிற்கு தேர்வு – பிரதமர் கையால் வழங்கப்படும்.

முதலையின் பிடியில் மாட்டிக்கொண்ட தன் சித்தப்பாவை காப்பாற்றிய ஒடிசாவை சேர்ந்த ஓர் சிறுவன் வீரதீர விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான். அந்த சிறுவனுக்கு பிரதமர் மோடி அடுத்த மாதம் 23-ஆம் தேதி விருதினை வழங்குவார்.

ஒடிசா மாநிலம் கேந்திர பாரா மாவட்டம் , கேந்திர கிராமத்தை சேர்ந்தவர் சிது மாலிக் (15) என்ற சிறுவன் , அவன் அங்குள்ள அரசு பள்ளியுள் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தன் சித்தப்பா வினோத மலிக்குடன் ஹன்சின ஆற்றங்கரைக்கு கடந்த 20-ஆம் தேதி சென்றான்.அப்போது அருகிலிருந்த குளத்திலிருந்து முதலை ஒன்று பாய்ந்தது அந்த முதலை மாலிக்கை கவ்வியது . உடனே சிது அருகில் இருந்த மூங்கில் காம்பை எடுத்து முதலையின் தலையில் பலமாக அடித்தான் அந்த வலியை தாங்க முடியாமல் முதலை அவரை விடுவித்து சென்றுவிட்டது. அதனால் அவர் உயிர் தப்பினார்.

நாட்டில் வீர சாகசம் செய்த சிறுவர்களை வீரதீர விருதிற்கு இந்திய கவுன்சிலின் தேர்வு செய்து வருகின்றது. எனவே இந்த ஆண்டிற்கான வீரதீர விருதிற்கு சிது மாலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளான்.அந்த சிறுவனுக்கு பிரதமர் மோடி அடுத்த மாதம் 23-ஆம் தேதி விருதினை வழங்குவார். இந்த தகவலால் சிது மாலிக் படிக்கும் பள்ளி மாணவ மற்றும் ஆசிரியர்களும், அந்த ஊர் மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close